தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாகவும், ஜாம்பவானாகவும் திகழ்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பையும், வசூலையும் அள்ளி தந்து உள்ளது. இதனையடுத்து மாநகரம், கைதி படத்தை எடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதி விஜய்யை வைத்து “மாஸ்டர் 64” படத்தை இயக்கி வருகிறார். விஜய் அவர்கள் நடிக்கும் “மாஸ்டர் ” படத்தின்மூன்றாவது போஸ்டர் குறித்து நேற்று முதல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு நிலவி வந்தது.
மேலும், இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 31 ஆம் தேதி வெளியாகி இருந்தது. மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை (ஜனவரி 15) மாலை 5 மணிக்கு வெளியாககி இருந்தது. இந்த இரண்டு போஸ்டரும் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், விஜய்க்கு வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதியின் போஸ்டர் எப்போது வெளியாகும் என்றும் ரசிகர்கள் ஆவளுடன் எதிர் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் வெறித்தனமாக நெருக்கும் நேர் இருக்கும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருப்பதை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பேட்ட படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.