உங்களுக்கு எதுக்கு ராய்ல்டி..!இளையராஜாவை குத்திக்காட்டிய ஆண்ட்ரியா..!

0
855
ilayaraja
- Advertisement -

இசை ஞானி இளையராஜாவின் பாடல்கள் தான் தற்ப்போது உள்ள தலைமுறை பலராலும் விரும்பபட்டு வருகின்றனர் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி என்றாலும் சரி உள்ளூர் ஆர்கிஸ்ட்ராவாக இருந்தாலும் சரி இளையராஜாவின் பாடல் நிச்சயம் அந்த மேடையில் ஒலிக்கும்.

-விளம்பரம்-

ilyaraja

- Advertisement -

இந்நிலையில் இளையராஜா தனது பாடல்களை பாடுபவர்கள் எனக்கு ராயல்டி தர வேண்டும் என்று ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், என் பாடல்களை பாடுவதற்கு முன்னர், என்னிடம் முன் அனுமதி பெற்று, அதற்குரிய விஷயங்களை முறைப்படி செய்துவிட்டு, அதன் பின் பாடுவதுதான் முறையானதாகும். இல்லையானால் சட்டப்படி குற்றமாகும்.

என்னிடம் முன் அனுமதி பெறாமல் பாடுகிறவர்கள் பாடுகிறவர்களோ, இசை வாசிக்கிறவர்களோ அப்படிச் செய்வது தவறு என்பதை நீங்கள் உணர வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை ஐ.பி.ஆர்.எஸ்-ல் மெம்பராக இருந்தேன். நான் இப்போது உறுப்பினராக இல்லாத காரணத்தால் இதுவரை என் சார்பாக வசூலித்துக்கொண்டிருந்த ராயல்டி தொகையை நமது தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்துக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கிறேன்.

-விளம்பரம்-

நீங்கள் பாடுவதற்கு நான் இடைஞ்சல் செய்யவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் வாங்குகின்ற பணத்துக்குத்தான் ராயல்டி தொகையே தவிர நீங்கள் பாடுகின்ற பாடலுக்கு ராயல்டி தொகை இல்லை. நீங்கள் இலவசமாகப் பாடினால், இலவசமாகப் பாடிவிடலாம். அதற்கு பணம்கொடுக்கதேவையில்லை. இதைச் சரியாக புரிந்துகொள்ளுங்கள். பணம் வாங்குகின்றீர்கள் அல்லவா என்று தெரிவித்திருந்தார்.

இளையராஜாவின் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் நடிகையும் படகியுமான ஆண்ட்ரியா, ராயல்டி என்பது பாடர்களை விட இசையமைப்பாளருக்கு செல்வது தான் நியாயம் என்று கூறியுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற ஆண்ட்ரியா பேசுகையில், ன்னுடைய பாடல்களைப் பாடி பணம் சம்பாதிப்போர் தனக்கு ராயல்டி தரவேண்டும் என்று இசை அமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ள நிலையில் ஒரு பாடலை உருவாக்குவதில் பாடகரை விட இசையமைப்பாளருக்கு தான் பங்கு அதிகம் என்று கூறியுள்ளார்.

Advertisement