தென்னிந்திய தமிழ் திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் அஞ்சு அரவிந்த். தமிழில் ஒரு சில படங்களில் நடித்தற்கு பின்னர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.தற்போது அஞ்சிவின் நிலை குறித்து பார்க்கலாம்.அஞ்சு அரவிந்த் அவர்கள் 1978ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரவிந்தன், காஞ்சனா ஆகிய தம்பதினருக்கு பிறந்தார்.அவர் கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஓய்வுபெற்ற மத்திய பாதுகாப்பு துறை அதிகாரி மற்றும் தாயார் ஓய்வுபெற்ற ஆசிரியை ஆவார்.
இவர் சினிமாத்துறையில் 1991 ஆம் ஆண்டு “வேனு கனவு ” என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.பின்னர் திரை உலகிற்கு வந்த உடன் பல துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனைத்தொடர்ந்து ஆரம்ப காலத்தில் விஜய் அவர்கள் நடிப்பில் சினிமா துறைக்கு வெளிவந்த 6 படங்களும் தோல்வியில் தான் முடிவடைந்தன. அதன் பின்னர் விஜய் ‘பூவே உனக்காக’ என்ற படத்தில் நடித்தார்.
மேலும்,அந்த படத்தில் அஞ்சு அரவிந்த் முக்கிய கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமானார்.மேலும், இதுதான் தமிழில் அவருடைய முதல் திரைப்படமாகும். அதன் பின்னர் தமிழில் அருணாச்சலம், ஒன்ஸ்மோர், எனக்கு ஒரு மகன் பிறப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் அஞ்சு அரவிந்த்.பின்னர் அஞ்சு 2002ஆம் ஆண்டு தன்னுடைய நெருங்கிய உறவான மாமன் தேவராஜ் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் கூட முழுமையாக முடியாமல் தங்களுடைய திருமண நாள் அன்று விவாகரத்து செய்து கொண்டார்கள். அதன் பின்னர் அஞ்சு பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும், இவர் துணைக் கதாபாத்திரங்களிலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பரப்பாகும் சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார்.அதுமட்டுமில்லாமல் பிரபலமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் , பரத நாட்டிய கலைஞராகவும் கூட இருந்தார் . அஞ்சு அரவிந்த் அவர்கள் நடிகை, டப்பிங் கலைஞர் ,தொகுப்பாளர், நடன கலைஞர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து சாதனை புரிந்துள்ளார். பின்னர் அவர் மீண்டும் 2006 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் வினய் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் அவருடைய வாழ்க்கை செட்டில் ஆகிவிட்டது. இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகும் இவர் படங்கள், சீரியல்கள் என தொடர்ந்து நடித்து வந்தார். இவர் அதிகமாக மலையாள படங்களில் தான் நடித்துள்ளார்.மேலும், மலையாள மொழியில் மட்டும் 35 சீரியல்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். மேலும், அவரை பார்த்து ரசிகர்கள் நம்ம அஞ்சு அரவிந்த் என்று ஆச்சரியப்படும் வகையில் உள்ளார்.