முதன் முறையாக ஊரடங்கை மீறிவிட்டேன். காரணத்துடன் பதிவிட்ட அனுபமா பரமேஸ்வரன்.

0
1856
anupama-parameswaran
- Advertisement -

சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸின் ஆட்டம் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி கோரத்தாண்டவம் ஆடுகிறது. கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் 56342 பேர் பாதிக்கப்பட்டும், 1886 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். அதிலும் தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் காட்டுத்தீயை விட அதிகமாக பரவி கொண்டு வருகிறது.

-விளம்பரம்-

இந்த சூழ்நிலையில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை இன்னும் சில நாட்களுக்கு நீட்டித்து உள்ளார்கள். காவல்துறை, மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் என பல பேர் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி வருகிறார்கள். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவஸ்தை படும் மக்களுக்கு சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல பேர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

- Advertisement -

ஊரடங்கால் அனைத்து துறைகளும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் நடிகை அனுபாமா பரமேஸ்வரன் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்கு சாதாரண மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை என அனைவரும் சோசியல் மீடியாவை பயன்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகை அனுபாமா பரமேஸ்வரன் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு கருத்து தெரிவித்து உள்ளார். நடிகை அனுபாமா பரமேஸ்வரன் அவர்கள் முதல் முறையாக ஊரடங்கை மீறிவிட்டார் என்றும் அதுவும் மருத்துவமனைக்கு செல்வதற்காக தான் உடைத்து உள்ளேன் என்றும், மாஸ்க் அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார்.

-விளம்பரம்-

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக அறிமுகமானார் அனுபமா. தற்போது தெலுங்கில் இவர் ஏகப்பட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Advertisement