தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் மிகப் பிரபலமான நடிகை என்று சொன்னால் நடிகை ஸ்ருதி ராஜை சொல்லலாம். ஏன் என்றால் அந்த அளவிற்கு பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். சின்னத்திரையில் நடிகைகளில் மிகவும் அழகான மற்றும் அமைதியான முகம் உடையவர் நடிகை ஸ்ருதி ராஜ். தன்னுடைய சீரியல் நடிப்பின் மூலம் பல குடும்பப் பெண்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வருபவர் நடிகை ஸ்ருதி ராஜ். ஸ்ருதி ராஜ் அவர்கள் முதன் முறையாக சினிமா உலகிற்கு மலையாள படத்தின் மூலம் தான் அறிமுகமானர்.

பின்னர் 1996-ஆம் ஆண்டு தளபதி விஜயின் நடிப்பில் வெளியான ‘மாண்புமிகு மாணவன்’ திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு நடிகை ஸ்ருதி ராஜ் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.ஆனால், இவர் சினிமா துறையில் பல மொழி படங்களில் நடித்தும் பெரிய அளவு சினிமா உலகில் வெற்றி பெறவில்லை. மேலும்,மக்களிடையேயும் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. இதனால், இவர் சின்னத்திரை நோக்கிய பயணம் செய்தார்.
நடிகை ஸ்ருதி ராஜ் முதன்முதலாக சின்னத்திரையில் நடிக்க ஆரம்பிக்க தொடங்கியது பிரபலமான சீரியல் ஆன நடிகை தேவயானி நடித்த ‘கோலங்கள்’ தொடரில் தான். அதற்கு பிறகு நடிகை ஸ்ருதி ராஜ் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என முக்கிய சேனல்களில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் சன் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘தென்றல்’ சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும், அந்த துளசி கதாபாத்திரத்தை தற்போது வரை யாராலும் மறக்க முடியாது. அதனால்,தென்றல் சீரியலை மீண்டும் யூடுப் சேனலில் ஒளிபரப்பு செய்தார்கள். அந்த அளவிற்கு தென்றல் சீரியல் மக்களிடையே அதிக வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதற்குப் பிறகு அபூர்வராகங்கள், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், ஆபீஸ் போன்று பல சீரியல்களில் நடித்து வந்தார்.
மேலும், அழகு சீரியல் மூலம் மீண்டும் தனக்கென ஒரு ரசிகர் படையை சேர்த்து உள்ளார் என்று கூட சொல்லலாம். சீரியல்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வரும் சுருதி தெலுங்கு சினிமா ஒன்றில் படு கவர்ச்சியாக நடித்துளளார். 2001 ஆம் ஆண்டு ‘வீடெக்கடி மொகுடண்டி’ படத்தில் அந்த மாதிரியான படத்தில் அவர் நடித்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.