அஜித் பிறந்த அதே நாளில் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் இந்த பிரபல நடிகை யாருனு தெரியுதா?

0
3836
anushka
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித் குமார். ரசிகர்கள் அன்போடு ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித், 1993-ஆம் ஆண்டு வெளி வந்த ‘அமராவதி’ என்ற படத்தில் தான் முதன் முறையாக கதையின் நாயகனாக நடித்தார். அந்த படத்தினை இயக்குநர் செல்வா இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘பவித்ரா, ஆசை, வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை, உல்லாசம், காதல் மன்னன், வாலி, அமர்க்களம், சிட்டிசன்’ போன்ற பல படங்களில் நடித்தார் ‘தல’ அஜித்.

-விளம்பரம்-
Image

இன்று (மே 1-ஆம் தேதி) ‘தல’ அஜித்தின் பிறந்த நாள். ஆகையால், அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி அஜித்திற்கு சமூக வளைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். மேலும், பல்வேறு பிரபலங்களும் அஜித்திற்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். அஜித் பிறந்தநாளை முன்னிட்டு #HBDDearestThaIaAJITH என்ற ஹேஷ் டேக்கை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். அந்த வகையில் மற்றொரு பிரபலத்தின் ஹேஸ்டெக்கும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. அது

- Advertisement -

பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா, இந்தியில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான Rab Ne Bana Di Jodi என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பு பெற்றது. அதை தொடர்ந்து நடிகை அனுஷ்கா சர்மா, இந்தியில் முன்னணி நடிகர்களான அமீர் கான், சல்மான் கான் என்று பல்வேறு படங்களின் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்.

Image

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நடிகை அனுஷ்கா சர்மா, பிரபல இந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2017ஆம் ஆண்டு இத்தாலியில் காதல் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை அனுஷ்கா சர்மா. இறுதியாக Angrezi Medium என்ற படத்தில் நடித்திருந்தார் அனுஷ்கா. தற்போது ஒரு வெப் சீரிஸ்ஸை தயாரித்து வருகிறார் அனுஷ்கா.

-விளம்பரம்-

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அனுஷ்கா சர்மாவும் தனது 32வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் அவரது ரசிகர்களும் விராட் கோலியின் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், ட்விட்டரில் #HappyBirthdayAnushkaSharma என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி அனுஷ்காவிகற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் விருஷ்கா ரசிகர்கள்.

Advertisement