நல்லா இருந்த மூஞ்ச இப்படி கேவலமா ஆக்கி வச்சி இருக்கீங்களே – அதுல்யாவின் லேட்டஸ்ட் வீடியோவை கண்டு புலம்பும் ரசிகர்கள்.

0
994
athulya
- Advertisement -

சினிமாவை பொறுத்து வரை நடிகைகள் பலர் தங்கள் அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது வழக்கமான ஒன்று தான். பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி துடங்கி தமிழ் நடிகை ஸ்ருதி ஹாசன் வரை எத்தனையோ பேர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கின்றனர். இதில் ஒரு சில நடிகைகள் தாங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதை ஓப்பனாக ஒப்புக்கொண்டு இருக்கின்றனர், ஒரு சிலர் அதை பற்றி வாயே திறப்பது இல்லை. அவ்வளவு ஏன் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளான நயன்தாரா, சமந்தா போன்ற நடிகைகள் கூட பிளாஸ்டிக் சர்ஜரி செய்தவர்கள் தான் என்ற ஒரு கிசு கிசுவும் இன்றளவும் இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது பிளாஸ்டிக் சர்ஜரி பஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறார் இளம் நடிகை அதுல்யா ரவி. சமூக வலைதளத்தின் மூலம் பிரபலமடைந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறாரகள். அந்த பிரியா வாரியார் தற்போது பிரகிடா வரை அனைவரும் சமூக வளைத்ததின் மூலம் பிரபலமாடைந்தவர்கள் தான். அந்த வகையில் நடிகை அதுல்யா ரவியும் ஒருவர். கோயம்பத்தூர் தமிழ் பெண்ணான இவர், 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே’ படத்தில் கண்களால் காதல் செய்து நமக்கு அறிமுகமானவர்.

- Advertisement -

அதுல்யாவும் கவர்ச்சியும் :

இவருக்கு சமூக வளைத்தளத்தில் ரசிகர் ஆர்மிகளும் பல உள்ளது. அழகும் இளமையும் திறமையும் இருந்த இவருக்கு இளசுகள் மூலம் கிடைத்த பிரபலம் மூலம் சினிமாவில் அடுத்தடுத்தது வாய்ப்பும் கிடைத்தது. காதல் கண் கட்டுதே படத்திற்கு பின்னர் இவர் ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்த ‘ஏமாளி ‘ படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதுல்யா ரவி முதன் முறையாக கவர்ச்சியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்த பாடங்களை பெற்ற அதுல்யா :

அந்த படத்தில் உள்ள அதுல்யா ரவியின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து எங்களுக்கு உங்கள் குடும்ப பாங்கான லுக் தான் பிடிக்கும் அதனால் இப்படியெல்லாம் நடிக்காதீர்கள் என்று தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.  பின்னர் இனி இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிய அதுல்யா அதற்கு மன்னிப்பும் கேட்டார். அதன் பின்னர் நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதுல்யாவின் முருங்கைக்காய் சிப்ஸ் :

இவர் நடித்துள்ள கேப்மாறி படத்தில் கூட அம்மணி இரட்டை வசனத்தை பேசியதை கண்டு ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சியடைந்தது. இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்து இருந்தார் . இந்த படத்தில் இயக்குனர் பாக்கியராஜின் மகன் ஷாந்தனு ஹீரோவாக நடித்து இருந்தார். புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகி இருந்த படத்தில் சாந்தனு, அதுல்யா ரவி, பாக்கியராஜ், மனோபாலா, ஆனந்தராஜ், மயில்சாமி, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

அதுல்யாவின் லேட்டஸ்ட் லுக் :

மேலும், பல விமர்சகர்கள் இந்த படத்திற்கு சுமாரான விமர்சனங்களை கொடுத்து இருந்தனர். இந்த படத்திலும் அதுல்யா ஒரு சில பாடல்களில் படு கவர்ச்சீயக நடித்து இருந்தார். இந்த நிலையில் அதுல்யா, சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். அதில் அவரது அழகை பார்த்து பலரும் சமந்தா போல நீங்களும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டீர்களா என்றும் பிளாஸ்டிக் மூஞ்சி என்றும் கேலி செய்துவந்தனர்.

அதுல்யா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ :

மேலும், பலரும் மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டீர்களா என்றும் சந்தேகம் எழுப்பி வந்தனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் அதுல்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அதுல்யாவின் முகம் வித்யாசமாக தெரிய ரசிகர்கள் பலரும் இப்படி நல்லா இருந்த மூஞ்ச இப்படி பண்ணி வச்சி இருக்கீங்களே என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement