அட கொடுமையே, நடிகை பாவனாவை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுரை – இதான் காரணம்.

0
994
- Advertisement -

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,84,795 என்ற அளவிற்கு உயர்ந்து உள்ளது. அதிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,52,225 என்ற அளவில் அதிகரித்து உள்ளது. நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பதால் உலக அளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு கூடிக்கொண்டே வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இந்தியாவை பொறுத்த வரை தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இன்னமும் ஒரு சில கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே போல ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்லும் நபர்களை கூட 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்ட பின்னரே அவர்களுக்கு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்து பின்னர் வீட்டிற்கு அனுப்புகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் பிரபல நடிகையான பாவனாவை 14 நாட்கள் சுய தனிமையில் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறித்தியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை பாவனா. தமிழில் நரேன் நடிப்பில் வெளியான  ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை பாவனா அஜித்துடன் ‘அசல் ‘ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லாததால் மலையாளம், கன்னட படங்களில் நடித்து வந்தார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பாவனா கன்னட பட தயாரிப்பாளரான நவீனை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் நடிகை பாவனா, சமீபஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் பெங்களூரில் இருந்து வந்தார் பாவனா. சமீபத்தில் முறையான அனுமதி பெற்று பெங்களுருவில் இருந்து கார் மூலம் கேரளாவிற்கு சென்றுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் அவரை வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement