4 மொழிகளில் நடித்தாலும் இதுவரை தான் நடித்த ஒரு படத்தை கூட பார்த்திடாத நடிகை பாவனா?

0
926
bhavana
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. இவர் தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பின்னர் தீபாவளி, அசல், வெயில், ஜெயம் கொண்டான், கூடல் நகர் போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். நடிகை பாவனா அவர்கள் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். அதிலும் இவர் அதிகமாக மலையாள மொழி படங்களில் நடித்து உள்ளார். கடந்த வருட துவக்கத்தில் பாவனாவை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை வெடித்தது. இது அனைவருக்கும் தெரிந்த அன்று.

-விளம்பரம்-
Bhavana's look in 96 remake | Kannada Movie News - Times of India

இந்த பிரச்சனை காரணமாக பிரபல மலையாள நடிகர் திலீப் அவர்களை கைது செய்து மலையாள திரையுலகில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன் பின்னர் தான் நடிகை பாவனா அவர்கள் தனது நீண்ட நாள் காதலன் நவீனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிகை பாவனா அவர்கள் சினிமாவிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டு இருந்தார்.

இதையும் பாருங்க : மற்ற படங்களில் ஒரு வரி வசனம் எனக்கு மட்டும் ஆறு வரி ? ‘அலைபாயுதே’ பேமஸ் வசனம் குறித்து கேட்ட மாதவன்.

- Advertisement -

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் ரிஎன்ட்ரி கொடுத்து உள்ளார்.. தமிழில் விஜய் சேதுபதி– திரிஷா நடிப்பில் வெளியான “96” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கன்னட மொழியில் ரீமேக் செய்து இருந்தார்கள். இந்த படத்தில் நடிகை பாவனா அவர்கள் திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

Priyanka Chopra sends wedding wishes to Malayalam actress Bhavana ...

இந்த படம் கன்னடத்திலும் நல்ல பெயரை வாங்கி தந்தது. இந்நிலையில் நடிகை பாவனா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பது, இதுவரை நான் நடித்த படங்கள் எதையுமே பார்த்ததில்லை. என்னுடைய நடிப்பை திரும்ப பார்க்கும் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை.

-விளம்பரம்-

இந்த படம் கன்னடத்திலும் நல்ல பெயரை வாங்கி தந்தது. இந்நிலையில் நடிகை பாவனா அவர்கள் கடந்த ஆண்டு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பது, இதுவரை நான் நடித்த படங்கள் எதையுமே பார்த்ததில்லை. என்னுடைய நடிப்பை திரும்ப பார்க்கும் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை.

BHAVANA

அது ஏனென்றும் தெரியவில்லை. தென்னிந்தியாவில் நான் நான்கு மொழிகளில் படம் நடித்து உள்ளேன். படத்தில் எனக்குக் கிடைத்த பாத்திரங்கள் எல்லாம் வித்தியாசமானவை. அவற்றை நான் நிறைவாக செய்துள்ளதாக கருதுவதே போதுமென்று நினைக்கிறேன் என்று கூறி உள்ளார். இப்படி இவர் கூறிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் பாருங்க : நீருக்கு அடியில் போட்டோ ஷூட் நடத்திய 17 வயது நடிகை. வைரலாகும் வீடியோ.

தற்போது நடிகை பாவனா அவர்கள் பஜரங்கி 2 படத்தில் நடித்து உள்ளார். பஜரங்கி படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது இந்த பஜரங்கி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக பாவனா நடித்து உள்ளார். இதில் கதாநாயகனாக சிவராஜ் குமார் நடித்து உள்ளார்.. இந்த படத்தின் இயக்குனர் ஹர்ஷா ஆவார். நடிகை பாவனாவை இதுவரை பார்க்காத அளவுக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement