மற்ற படங்களில் ஒரு வரி வசனம் எனக்கு மட்டும் ஆறு வரி ? ‘அலைபாயுதே’ பேமஸ் வசனம் குறித்து கேட்ட மாதவன்.

0
1513
- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படம் ஒரு ரொமான்டிக் படமாக ஹிட் ஆனது. நடிகர் மாதவனின் முதல் படமான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. சொல்லபோனால் நடிகர் மாதவனுக்கு இந்த படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு நல்ல துவக்கமாக இருந்தது என்றும் கூறலாம். மாதவன் இந்த படத்தில் நடிக்க காரணம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தான். எப்படியெனில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் எடுத்த விளம்பரப் படத்தில் நடித்திருந்த மாதவனின் புகைப்படங்களை இருவர் பட சமயத்தில் மணிரத்னத்திடம் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

-விளம்பரம்-

மனிதனும் மாதவனே பிடித்துப்போக பின்னர் மாதவனுக்கு கிடைத்தது தான் இந்த அலைபாயுதே படத்தில் வாய்ப்புஅரவிந்த்சாமி, பிரசாந்த் போன்ற நடிகர்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் நடிகர் மாதவன் மட்டும்தான். தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் மாதவன்.

இதையும் பாருங்க : சூப்பர் ஹிட் பட ரீமேக்கில் நடிக்க போட்டி போடும் சிவகார்த்திகேயன், சிம்பு. இதுக்கு யார் சரியா இப்பாங்க?

- Advertisement -

சமீபத்தில் அலைபாயுதே படம் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி அலைபாயுதே என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் வைரலானது. அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் மணிரத்னத்தின் மனைவி நடிகை சுஹாஷினி, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்.நீங்கள் யாரேனும் மணிரத்னமிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றால் அதை வீடியோவாக 25 வினாடிகள் எடுத்து உங்களை பற்றியும் அறிமுகப்படுத்திக் கொண்டு 90946 77777 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் அனுப்புங்கள்.

அனுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் இயக்குநர் மணிரத்னம் பதில் அளிப்பார் என்று சுஹாசினி மணிரத்னம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் மாதவன், மணிரத்னத்தை ஒரு கேள்வி கேட்டுள்ளார். அதில், பொதுவாக உங்கள் படத்தில் வரும் வசனங்கள் மிக பிரபலம் குறிப்பாக நாயகன் படத்தில் வரும் ‘நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா ‘போன்ற வசனங்கள் மிகவும் அழுத்தமாக இருந்தது. உங்களது படங்களில் வசனங்கள் நீளமாக இருக்காது. ஆனால் என்னுடைய படத்தில் இடம்பெற்ற நான் உன்ன விரும்பல நீ அழகா இருக்கேன்னு நினைக்கல ஆனா இதெல்லாம் நடந்து விடுமோ என்று பயமாக இருக்கும் என்ற வசனம் ஆறு வரிக்கு மேலே இருந்தது.

இதையும் பாருங்க : நீருக்கு அடியில் போட்டோ ஷூட் நடத்திய 17 வயது நடிகை. வைரலாகும் வீடியோ.

-விளம்பரம்-

உண்மைத் தன்மையுடன் வசனங்களை விரும்பும் நீங்கள் என்னுடைய படத்தில் மட்டும் ஏன் அப்படி நீண்ட வசனத்தை வைத்தீர்கள். அதற்கு குறிப்பிட்ட காரணம் ஏதாவது இருக்கிறதா? இல்லை எதிர்ச்சியாக அமைந்த வசனம் தானா என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மணிரத்னம் என்னுடைய இருவர் பணத்தை நீ பார்க்க வேண்டும் என்று கூறினார். மேலும் அந்த காட்சியில் பிளாட்பார்மில் இரண்டு ரயில்கள் இருந்தது அந்த இரண்டு ரயில்களையும் படத்தில் காண்பிக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தது ஆனால், அந்த இரண்டு ரயிலும் அங்கே சில மணி நேரம் தான் இருக்கும் என்பதால் அந்த காட்சியை நான் ஒரே டேக்கில் முடித்துவிட வேண்டும் என்று தான் நினைத்தேன் என்று கூறியுள்ளார் மணிரத்னம்.

Advertisement