மனைவியை தொல்லை செய்ததால் நாயிடம் கடிவாங்கிய நகுல். வைரலாகும் வீடியோ.

0
1063
nakul
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையான தேவயாணியின் சகோதரர் நகுல். நகுல் 2003-ஆம் ஆண்டு வெளி வந்த ‘பாய்ஸ்’ படத்தில் நடித்தார். இது தான் அவர் அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம். இந்த படத்தினை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் நகுலுடன் சித்தார்த், பரத், தமன், மணிகண்டன், ஜெனிலியா, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் பெரிதும் பேசப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து ‘காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும், நாரதன், பிரம்மா.காம்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் நடிகர் நகுல். இதில் ‘வல்லினம், தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ ஆகிய இரண்டு படங்களும் நகுலின் நடிப்பிற்கு லைக்ஸ் வாங்கி தந்தது.

இதையும் பாருங்க : 4 மொழிகளில் நடித்தாலும் இதுவரை தான் நடித்த ஒரு படத்தை கூட பார்த்திடாத நடிகை பாவனா?

- Advertisement -

அவ்விரண்டு படங்களிலும் அவரின் கேரக்டர் அற்புதமாக அப்படங்களின் இயக்குநர்களால் எழுதப்பட்டிருந்தது. அதுவே அதற்கு காரணம். ‘காதலில் விழுந்தேன்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘நாக்க முக்க’ பாடல் செம ஃபேமஸாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, உலகமெங்கும் ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது.

ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் நகுல் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ பதிவில் நடிகர் நகுல் அவர் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியான நாயுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : சந்திரமுகி 2 படத்தை அடுத்து தனது அடுத்த பட சம்பளத்தையும் கொரோனா நிதியாக கொடுத்த லாரன்ஸ். இம்முறை எவ்வளவு தெரியுமா ?,

-விளம்பரம்-

மேலும் நகுலின் மனைவியை டிவி பார்க்க விடாததால் தான் அந்த நாய் இப்படி செய்ததாம். ஒரு கட்டத்தில் நகுலை அந்த நாய் உண்மையாகவே லேசாக கடித்து விடுகிறது. இருப்பினும் நகுலுக்கு பெரிய காயம் ஏற்படவில்லை என்று தான் தெரிகிறது. அதன் பின்னர் அந்த செல்ல நாயை எப்படியோ சமாதானம் செய்துவிடுகிறார் நகுல். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. நடிகர் நகுல் நடிப்பில் கடைசியாக வெளி வந்த படம் ‘செய்’. இந்த படத்தினை இயக்குநர் ராஜ் பாபு இயக்கியிருந்தார். இப்போது ‘எரியும் கண்ணாடி’ என்ற தமிழ் திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார் நகுல்.

Advertisement