நாங்கள் வேசிகள் தான், ஆனால் எங்கள் பிள்ளைகளை – கண்ணீருடன் பேசிய நடிகை தீபா. இவருக்குள் இவ்வளவு வலியா?

0
173
deepa
- Advertisement -

பெண்கள் குறித்து நடிகை தீபா பேசியிருக்கும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான குணச்சித்திர நடிகையாக திகழ்பவர் தீபா. இவர் நிறைய நிறைய படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் சினிமா உலகில் முதன்முதலில் மாயாண்டி குடும்பத்தார் என்ற படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் இவர் மணிவண்ணனுக்கு மகளாக நடித்திருந்தார். அதனை அடுத்து வெடிகுண்டு முருகேசன் படத்தில் முக்கியமான தீபா ரோலில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படி இவருடைய நடிப்பில் வெளியான இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் அமையாததால் இவர் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்று விட்டார். சீரியல்களில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதன் பின் 2016 ஆம் ஆண்டு கிடாரி படத்தின் மூலம் இவருக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டாவது இன்னிங்ஸை சரியாக பயன்படுத்திக் கொண்டு தீபா பல படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

தீபா நடித்த படங்கள்:

அந்த வகையில் செம, கடைக்குட்டி சிங்கம், மகாமுனி, நம்ம வீட்டு பிள்ளை, சில்லு கருப்பட்டி, டாக்டர் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் தீபா நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ஜெயிலர் படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தீபா நடித்திருந்தார். இதை அடுத்து சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் வா வரலாம் வா. தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார்.

தீபா நடிக்கும் படங்கள்:

அதில் ஒன்று தான் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் பல போராட்டங்களுக்குப் பிறகு உருவாகி இருக்கும் இந்தியன் 2 படத்தில் தீபா நடித்திருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் வருகிறார். தற்போது இவருக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் தீபா கலந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் தீபா சொன்னது:

அதில் அவர், எங்களை யாராவது ஏமாற்றி விட்டால் கூட அவன் இன்னைக்கு வருவான், நாளைக்கு வருவான் என்று காத்துக் கொண்டு இருக்க வேண்டுமா? நாங்கள் மனித பிறவிகள் கிடையாதா? எங்களுக்கு உணர்வுகளோ, உணர்ச்சிகளோ கிடையாதா? ஆண்களுக்கு மட்டும்தான் எல்லாம் இருக்க வேண்டுமா? கணவர் அடித்தால் வெளியே சொல்லாதே, காவல் நிலையத்துக்கு போனால் அவமானம் ஆகிவிடும் என்றெல்லாம் சொல்கிறார்கள். இளம் வயதில் கணவர் இழந்த ஒரு பெண் யாருடனாவது போய்விட்டால் அவருக்கு ஒரு பட்டம் சூட்டி வாழ்க்கையை முடித்து விடுகிறார்கள். நீங்கள் நான்கு பேர் சேர்ந்து அவருக்கு மறுமணம் செய்து வையுங்களே. அதையும் செய்யவில்லை. நாங்கள் பாட்டு பாட கூடாது, ஆடக்கூடாது, ஓடக்கூடாது, சிரிக்க கூடாது.

பெண்கள் குறித்து சொன்னது:

காரணம், இதனால் உங்களுக்கு கௌரவ குறைச்சல். எங்களுக்கும் சின்ன சின்ன ஆசைகள் இருக்கு. நாங்கள் தாசிகள் என்றே வைத்துக் கொள்வோம். அந்த நிலைக்கு அப்படி மாற்றிய நீங்கள் யார்? ஊரில் கரகாட்டக்காரியை ஆட சொல்லி ரசிக்கும் நீங்கள் யார்? நாங்கள் தாசிகளே ஆனாலும் எங்கள் பிள்ளைகளை காப்பாற்றி வருகிறோம். உங்களைப் போல் குடித்துவிட்டு ஊரை அழிக்கவில்லை. ஒரு பெண் குடும்பம், குழந்தை, வேலைக்கு செல்வது என கஷ்டப்படுகிறார். ஒரு பொண்ணுக்கு ஒரு ஆண் மீது எப்போது வேண்டுமானாலும் காதல் வரலாம். அது தவறே கிடையாது. அது எனக்கும் அவருக்கும் இடையே உள்ள விஷயம். அதை வைத்து ஒரு பெண்ணுடைய கேரக்டரை தீர்மானிக்க கூடாது என்று கூறியிருந்தார்

Advertisement