கயல் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை- அவருக்கு பதில் யாருன்னு தெரியுமா? இவங்க தானாம்.

0
258
kayal
- Advertisement -

கயல் சீரியல் இருந்து முக்கிய நடிகை விலகியுள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக கொரோனா தொடங்கியதிலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என சிறுவர்கள் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இதனால் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது.
அதிலும் ஒவ்வொரு சேனலிலும் மக்களின் ஃபேவரிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. மேலும், சன் டிவியில் புதிது புதிதாக சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் கயல்.

இதையும் பாருங்க : தன் வருங்கால கணவருடன் இருக்கும் நக்ஷத்ராவின் புகைப்படத்தை கேலி செய்து ஸ்ரீநிதி போட்ட கமன்ட் – திட்டி தீர்த்த ரசிகர்கள்.

- Advertisement -

கயல் சீரியல்:

தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், சீரியலில் கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல் தன்னுடைய வருமானத்தை வைத்து மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார். கயல் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை சுற்றியும் மற்றும் அவரை காதலிக்கும் சஞ்சீவ் சுற்றியும் தான் சீரியல் செல்கிறது. தற்போது சன் டிவி சீரியல் அதிக டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் முன்னிலையில் இருக்கிறது.

சீரியலில் நடிக்கும் நடிகர்கள்:

இந்த சீரியலில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டியும், கதாநாயகனாக சஞ்சீவ்வும் நடிக்கிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் மக்கள் காதல் பிரபலமானவர் சைத்ரா ரெட்டி. அதன் பின் இவர் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து எல்லோருக்கும் பிடித்தமான வில்லியாக திகழ்ந்தவர். இதுவரை நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பார்த்த இவரை பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் பார்க்க புதிதாக இருக்கிறது.

-விளம்பரம்-

சீரியலின் தற்போதைய நிலை:

இந்த கயல் சீரியலின் ஹிட்டிற்கு முக்கிய காரணமாக சைத்ரா திகழ்கிறார். தற்போது கயல் சீரியல் தான் TRP ரேட்டிங்கில் முன்னிலையில் வகுத்து வருகிறது. அந்த அளவிற்கு தொடர் மக்களை கவர்ந்து இருக்கிறது. தற்போது சீரியலில் தன்னுடைய தங்கை திருமணத்தை நடத்தி வைக்க கயல் போராடுகிறார். இதனால் பல தடைகள் வருகிறது. இதையெல்லாம் எதிர்கொண்டு கயல் திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பாரா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்றுகொண்டிருக்கின்றது.

சீரியலில் இருந்து விலகிய நடிகை:

இந்த நிலையில் கயல் சீரியலில் இருந்து முக்கிய நடிகை ஒருவர் விலகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. அதாவது, இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை காயத்ரி. தற்போது இவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருடைய கதாபாத்திரத்தில் உமா ரியாஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு புதியதாக வடிவுக்கரசியும் சீரியலில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

Advertisement