அந்த நல்ல விஷயம் இப்போது நடந்திருக்கு – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 குறித்து ஹேமா உருக்கம்.

0
228
PandianStores
- Advertisement -

அந்த நல்ல விஷயம் நடந்திருக்கிறது என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் குறித்து ஹேமா பகிர்ந்து இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன், தீபிகா என பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அதோடு இந்த சீரியல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புடன் சென்று இருந்து இருந்தது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைவடையும் முன்னரே இரண்டாம் சீசனுக்கான ப்ரோமோ வெளியாகி இருந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது தான் இரண்டாவது பாகத்தின் டைட்டில். இதற்கு முன்பு அண்ணன் தம்பிகள் கதையை மையமாக வைத்து எடுத்திருந்தார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

தற்போது இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து கதையை எடுக்கிறார்கள். மேலும், முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் தான் தற்போது அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். மேலும் இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் ஸ்டாலின் மகளாக ஹாசினி என்கிற விசாலினி நடிக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்:

இன்று முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் மீனா நடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, முதல் பாகத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஹேமா. இவர் இரண்டாவது சீசனிலும் நடிக்கிறார் என்று சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் கமெண்ட் போட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 குறித்து ஹேமா பதிவு:

பின் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஹேமா, தயவுசெய்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் நான் இருப்பதாக தவறான செய்தியை பரப்பாதீர்கள். இதுவரையில் எதுவும் உறுதியாகவில்லை. ஏதாவது நல்ல விஷயங்கள் நடந்தால் கண்டிப்பாக உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவிப்பேன். நன்றி என்று கூறியிருக்கிறார். இந்த பதிவால் ரசிகர்கள் வருத்தம் அடைந்திருந்தார்கள். இதனை அடுத்து ஹேமா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் இந்த தொடர் குறித்த செய்தியை பகிர்ந்து இருக்கிறார்.

ஹேமா பதிவு:

அதில், ஆமாம் அதிகாரப்பூர்வமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். தற்போது இவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து நீங்கள் என்ன ரோலில் நடிக்கிறீர்கள் என்று கேட்டு வருகிறார்கள். மேலும், இந்த தொடரில் நடிகர் அஜய் ரத்தினம், கதாநாயகி நிகழ்ச்சியின் போட்டியாளர் ஷாலினி, ஶ்ரீலேகா ராஜேந்திரன் என பல நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். கண்டிப்பாக இந்த இரண்டாவது பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement