முதலில் நீ இதை கத்துக்கோ..! தமிழ் சினிமாவில் நீடிக்க தங்கைக்கு அட்வைஸ் கொடுத்த இனியா..?

0
614
iniya

தமிழ் சினிமாவில் நடிகர் ,நடிகைகளின் சகோதர சகோதரிகள் திரை துறையில் எளிதாக நுழைந்து விடுகின்றனர். அவர்கள் உடன் பிறப்புக்கள் ஏற்கனவே சினிமா துறையில் இருப்பதால் அவர்களுக்கு எளிதான அறிமுகம் கிடைத்து விடுகிறது. இந்நிலையில் நடிகை இனியாவின் தங்கையும் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

actress Iniya

நடிகை இனியா ,2011 இல் விமல் நடிப்பில் வெளியான “வாகை பூ சூடவா” என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். அந்த படத்திற்கு பின்னர் அருள்நிதி நடித்த “மௌனகுரு” படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகை இனியாவின் தங்கை தாராவும் சினிமாவில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
புதுமுக இயக்குநர் ரசாக் இயக்கியுள்ள “கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்கய்யா” என்ற படத்தில் அவர் நடித்துளளார். ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் காமெடி நடிகர் மனோபாலாவின் மகன் ரத்தீஷ் நடித்துள்ளார்.

iniya,thara

சமீபத்தில் இந்த படத்தில் நடித்ததை பற்றி பேசிய நடிகை இனியாவின் தங்கை தாரா கூறுகையில் “இந்த படத்தில் நான் மன்சூரலிகானின் மகளாக நடித்துளேன். நான் இந்த படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். மேலும் என் அக்கா அடிக்கடி ஒன்று சொல்லுவார் ,முதலில் தமிழை ஒழுங்காக கற்றுக்கொள் அப்போது தான் உனக்கு ஒரு நல்ல அடையாளம் கிடைக்கும் என்று எப்போதும் அறிவுறுத்துவார் ” என்று தெரிகித்துள்ளார்.