சிவகார்த்திகேயனை கலாய்த்து வம்பில் மாட்டிய நடிகர்.! ரசிகர்கள் கேள்வியால் அந்தர் பல்டி.!

0
312

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரங்களுக்கு ஈடாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். பலர் இவரது வளர்ச்சியை பாராட்டி வந்தாலும், ஒரு சிலர் இவரது வளர்ச்சியை கண்டு பொறாமை பட்டு தான் வருகின்றனர்.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் “சீமராஜா ” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரைலர் ஒன்றும் வெளியாகி இருந்தது.

அந்த ட்ரைலரில் சிவகார்த்திகேயன் ஒரு சில மாஸ் வசங்களையும், பாகுபலி போன்ற சில கெட்டப்பில் தோன்றுவது போல சில காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் ,யாரெல்லாம் மாஸ் பண்றதுனு ஒரு வெவஸ்த இல்லாம போச்சி, தமிழ் ரசிகர்களுக்கு தெரியும். உண்மையான திறமைகளை ஆதரியுங்கள். என்று பதிவிட்டிருந்தார்.

arun vijay

அந்த பதிவில் நடிகர் அருண் விஜய், சிவகார்த்திகேயனை தான் குறிப்பிட்டுள்ளார் என்று ட்விட்டர் வாசிகள் சிலர் பதிவிட. சிறிது நேரம் தனது ட்விட்டர் பக்கம் ஹக் செய்யப்பட்டுவிட்டது. மேலும், இன்னும் ஒரு மணி நேரத்திற்கு பதிவாகும் செய்திகளை கண்டு கொள்ளாதீர்கள் என்று பதிவிட்டு அந்தர் பல்டி அடித்துவிட்ட்டார் நடிகர் அருண் விஜய்.