லட்சுமி ராமக்ரிஷ்னனை கேவலமான வார்த்தை திட்டிய நபர்..! பதிலுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா ..?

0
469
lakshmi bramakrishnan

சில நாட்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் இரட்டை மொழி வசனத்தில், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயகுமார் இயக்கத்தில் வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து ” படம் ஏகப்பட்ட விமரசங்களுக்கு உள்ளாகியது. மேலும் இந்த படம் குறித்து விமர்சித்ததால் இவரை மோசமான வார்த்தையில் திட்டியுள்ளார் ஒரு நபர்.

lakshmi ramakrishnan

என்னமா எப்படி பண்றீங்களமே என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இரண்டு நபர்கள் தான் ஒன்று விஜய் டிவியின் என்னமா ராமர், மாற்றுருவர் இந்த வசனத்திற்கு சொந்தக்காரரான லட்சுமி ராம கிருஷ்ணன். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.

சமூக ஆர்வலரான இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் “சொல்வதெல்லாம் உண்மை ” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் . மேலும் பல தமிழ் படங்களிலும் துணை நடிகராக நடித்துள்ளார்.மேலும் தமிழில் 3 பாடங்களையும் இயக்கியுள்ளார்.

lakshmi

சமீபத்தில் “இருட்டு அறையில் முரட்டு குத்து ” ஒரு மோசமான படம் என்று ஒரு பேட்டி ஒன்றை அளித்திருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். அவர் பேட்டியளித்த அந்த வீடியோவின் கீழே ஒரு நபர், லட்சுமி ராமகிருஷ்ணனை மோசமாக திட்டி கமெண்ட் செய்துள்ளார். இதனை கண்டு கோபமடைந்த அவர் அவரது விவரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த நபருக்கு போன் செய்தும் விளாசியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.