நடிகைகள் எல்லாம் விபச்சாரிகளா? கூவத்தூர் விவகாரம் தொடர்பாக திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த கஸ்தூரி

0
502
- Advertisement -

திரிஷாவுக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி கூறிய கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் திரிஷா குறித்த விவகாரம் தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் அதிமுக நிர்வாகிகள் சுமார் 100 பேர் ஒரு வாரம் தங்கி இருந்தார்கள். இச்சம்பவம் தமிழக அரசியலில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இந்த விடுதியில் பல நடிகைகளும் தங்கி உல்லாசம் செய்து இருந்ததாக தகவல் வந்திருந்தது.

-விளம்பரம்-
Trisha

இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஏவி ராஜு பேட்டியில் கூறியிருப்பது, எடப்பாடிக்கு குடிப்பழக்கம் எல்லாம் கிடையாது. ஆனா, அவர் திரிஷா வேணும்னு கேட்டுட்டான். நடிகர் கருணாஸ் தான் இது எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருந்தார். அங்கு நிறைய நடிகைகள் இருந்தார்கள். திரிஷாவுக்கு மட்டுமே 25 லட்சம் கொடுத்து இருந்தாங்க என்று பேசி இருந்தார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பிரபலங்கள் பலருமே ஏ வி ராஜூவு க்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

திரிஷா கண்டனம்:

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை திரிஷா, ராஜுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து இனி என் வழக்கறிஞர்கள் குழு பார்த்துக் கொள்வார்கள் என்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஏவி ராஜு, திரிஷாவை போல இளம் நடிகைகளை தான் அவர் கேட்டார் என்று கூறினேன். எந்த நடிகையும் குறிப்பிட்டு பேசவில்லை. என்னுடைய பேச்சு திரித்து கூறப்பட்டிருக்கிறது என்று அந்தர்பல்டி அடித்து பேசி இருக்கிறார். இருந்தாலும், ஏவி ராஜுவுக்கு எதிராக புகார் அளித்திருக்கிறார்கள். தற்போது இந்த சம்பவம் தமிழக முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

நடிகை கஸ்தூரி பேட்டி:

இந்த நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி கூறியிருப்பது, சமீப காலமாகவே சினிமா நடிகைகளை ரொம்ப கொச்சையாக அவதூறாக பேசுவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. யார் யாரோ வாய்க்கு வந்த படியெல்லாம் பேசிட்டு போறாங்க. அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. நாட்டுக்கு பறைசாற்றும் வகையில் யாரும் இல்லை. அவர் அவர்களுக்கு வாய் இருக்கிறது, நாக்கு இருக்கிறது என்று பேசி விடுகிறார்கள். அதை நிரூபிக்கும் இடத்தில் யாருமே இல்லை. இப்போதுதான் மன்சூர் அலி கானின் பிரச்சனை கொஞ்சம் ஓய்ந்திருந்தது. மீண்டும் அந்த நடிகையைப் பற்றி ரொம்ப ரொம்ப கேவலமாக அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜு பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

திரிஷா விவகாரம் குறித்து சொன்னது:

அவருடைய கட்சி தலைவர்களுடனே தனிப்பட்ட முறையில் பிரச்சனை எல்லாம் இருக்கலாம். இதனால் இவருக்கு தெரியாத ஒரு விஷயத்தை, பார்க்காத ஒரு விஷயத்தை ரொம்ப தெரிந்த மாதிரியே சொல்லி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது. சினிமா நடிகைகள் எல்லோருமே விபச்சாரிகள் மாதிரியும், நடிகர்கள் எல்லோருமே மாமா வேலை பார்க்கிற மாதிரி பேசி இருக்கிறார். எப்போதும் ஒரு பொது தன்மையுடன் பேசுங்கள். எல்லா நடிகைகளும் வந்துட்டு போனாங்க என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். இப்படி பேச உங்களுக்கு யார்? அதிகாரம் கொடுத்தது. நூறு ஆண்டுகளுக்கு மேல் வீட்டுக்குள்ளேயே அடங்கி கிடக்கும் பெண்கள் இப்போதுதான் சில ஆண்டுகளாக வெளியே வந்து பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கஸ்தூரி வைத்த கோரிக்கை:

பெண்கள் வேலை செய்யும் இடத்தில் பாலியல் பிரச்சனை தாண்டி வாழ்க்கையில் சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். என்னுடைய சக நடிகைகள் என்னை மாதிரி சமூக பிரச்சனைகள் குரல் கொடுக்காமல் இருக்கலாம். அவர்கள் எல்லாம் அறிவே இல்லாத முட்டாள்கள் இல்லை. அவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் உள்ளம், சுயமரியாத இருக்கிறது. இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வாய்க்கு வந்தபடி பெயர் சொல்லி இத்தனை லட்சம் கொடுத்தாங்க என்று பேச கூடாது. ஒரு பெண்ணாகவும் நடிககையாகவும் தமிழ்நாடு போற்றும் ஒரு தலைவியாக உருவெடுத்த புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா கட்சியில் இருந்து இப்படி பெண்களை இழிவு படுத்தும் விதத்தில் பேசி இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட நடிகரும், நடிகையும் கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தேசிய மகளிர் ஆணையத்தில் இருக்கும் குஷ்பூ இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேசமயம் தமிழக அரசும் நீதித்துறையும் தன்னிச்சையாக முன்வந்து இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement