கேப்டன் சமாதிக்கு முன் குறி, பிரேமலதாவிற்கே விபூதி அடித்த அரைகுறை அகோரி கலையரசன்.

0
517
- Advertisement -

விஜயகாந்த் நினைவிடத்தில் அகோரி கலையரசன் அழுது பூஜை செய்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் தன்னை அகோரி என்று கலையரசன் பேசும் வீடியோக்கள் தான் வைரலாக்கப்பட்டு வருகிறது. இவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து நாட்டுப்புற நடனமாடிய வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் பல மாணவர்களுக்கு சிலம்பாட்டம், பரதநாட்டியம் போன்ற பல கலைகளை சொல்லிக் கொடுத்திருந்தார். தான் போதை பொருள் வழக்கில் சிக்கியதால் தந்தை Bjpயில் இணைந்தாரா? சர்ச்சைகளுக்கு வரலக்ஷ்மி விளக்கம்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் கலையரசனின் மனைவி நிறைமாத கர்ப்பமாக இருக்கும் போது பறை இசைத்தப்படியே வெறும் காலில் டியூப்லைட்டை எல்லாம் மிதித்து சாதனை படைத்திருந்தார். அதை அவர் செய்ததற்கு காரணம், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை கண்டித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்ததாக கூறியிருந்தார். இதன் மூலம் இந்த ஜோடிகள் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். அதற்கு பிறகு சில காலங்கள் இவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை.

- Advertisement -

அகோரி கலையரசன் குறித்த தகவல்:

திடீரென்று கடந்து சில வாரங்களாகவே கலையரசன் தன்னை அகோரி என்று சொல்லி அருள்வாக்கு கொடுத்து வருகிறார். இவரை பல youtube சேனல்கள் பேட்டி எடுத்தும் வருகிறது. இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. அதோடு இவரின் மனைவியும் தன்னுடைய கணவருக்கு ஆதரவாக பேசி வருகிறார். இந்த நிலையில் அகோரி கலையரசன் விஜயகாந்த் சமாதிக்கு சென்று இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜயகாந்தின் நினைவிடத்தில் கலையரசன்:

இவர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று தியானம் செய்து ஹேமலதாவை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது அவர், நான் நிறைய மக்களுக்கு விஜயகாந்த் ஐயா இறைவனிடம் சேர்ந்து விட்டார் என்று சொல்லி இருக்கிறேன். ஐயாவுடைய கோவிலில் உங்களுடைய வேண்டுதலை வைத்தால் அது கண்டிப்பாக நடக்கும். நீங்கள் எனக்கு திருமணம் நடைபெற வேண்டும், குழந்தை வரம் வேண்டும், எனக்கு வேலை வேண்டும் என்று வேண்டுகோளை வைத்தால் நிச்சயம் நடைபெறும்.

-விளம்பரம்-

விஜயகாந்த் குறித்து சொன்னது:

நான் வாக்கு கொடுக்கிறேன். ஐயா இறைவனோடு தான் சேர்ந்து இருக்கிறார். அவருடைய புண்ணியங்கள் எல்லாம் பல மக்கள் வீட்டில் கிடைத்திருக்கிறது. ஐயா திருவுருவம் பல கோவில்களின் கர்ப்பகிரகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஐயாவின் புகழ் உலகெங்கும் பரவும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. விஜயகாந்த் ஐயா எப்போதும் இந்து மதம், இந்த ஜாதி என்று கூப்பிட்டது கிடையாது. இந்துவே எழுதுவா, முஸ்லிமே முழங்கி வா, கிறிஸ்துவனை கிளம்பி வா என்று ஐயா சொல்லவில்லை.

விஜயகாந்த் புகழ்:

மனிதனே எழும்பி வா, மானிடம் படைக்கவா, உன் பாதங்கள் நடக்க துவங்கினால் உன் பாதைகள் மறுப்பதில்லை என்று சொன்ன வீர தமிழன் விஜயகாந்த் ஐயா. இன்று இங்கே உறங்கி கொண்டிருக்கிறார். ஐயா எல்லோரிடமும் தான் பேசிக் கொண்டிருக்கிறார். ஐயாவின் புகழ் உலகெங்கும் பரவும். நான் அம்மாவை சந்தித்ததில் சந்தோஷம். ஐயாவை சந்தித்து ஆசி பெற வந்தேன் என்று கூறினார். அப்போது பிரேமலதா, நீங்கள் சாப்பிட்டுவிட்டு போங்கள் என்று சொல்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement