ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்ததற்கு வருத்தப்பட்டேன் என்று நடிகை குஷ்பூ கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் குஷ்பூ. இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அதன் பின் இவர் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கி இருந்தார். மேலும், சினிமா உலகில் 90 களின் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் குஷ்பு. அதோடு ரசிகர்கள் குஷ்பு மீது இருந்த பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி இருகிறார்கள். பின் இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிளும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.
அண்ணாத்த படம்:
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் 'அண்ணாத்த' படத்தில் நடித்தது குறித்து பேசி இருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் தான் 'அண்ணாத்த'. இந்த படம் அண்ணன் தங்கை பாசக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் நடிகை குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி என்று பலர் நடித்திருந்தார்கள். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
https://www.youtube.com/shorts/9reSP_SEgn4
குஷ்பு பேட்டி:
சமீபத்தில் குஷ்பூ அளித்த பேட்டியில் இப்படம் தொடர்பாக பேசியிருக்கிறார். அதில், அண்ணாத்த படத்தில் மீனாவும் நானும் இணைந்து நடித்திருந்தோம். நாங்கள் இருவரும் படத்தில் கதாநாயகிகள் என்று தான் முதலில் தெரிவித்தனர். ரஜினிக்கு படத்தில் வேறு ஜோடி இல்லை என்றும், நாங்கள் இருவரும் தான் கடைசி வரை படத்தில் வருவோம் என்றும் உறுதியாக கூறியிருந்தார்கள். அதனை நம்பி தான் நான் சம்மதித்தேன். முதலில் என் கதாபாத்திரம் நன்றாகத்தான் இருந்தது.
மிகவும் வருத்தப்பட்டேன்:
ஆனால், படத்தில் திடீரென்று ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா வந்தார். அதனால் என்னுடைய கதாபாத்திரமும் மீனாவின் கதாபாத்திரமும் நகைச்சுவையாக மாற்றப்பட்டது என்பதை உணர்ந்து நான் வருத்தப்பட்டேன். அந்தப் படத்தைப் பார்த்த பிறகு தான், நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன் என்று கூறியுள்ளார். மேலும், படத்தின் பாதியில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு ரஜினிகாந்த் காரணம் கிடையாது. அவர் அப்படிப்பட்டவர் இல்லை. அதுபோல் அவர் செய்ய மாட்டார். எனக்கு ரஜினிகாந்த் குறித்து பல வருடங்களாகத் தெரியும் என்று கூறியிருக்கிறார்.

டூயட் பாடல்கள் இருந்தது :
அந்தப் படத்தில் சரியாக என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எங்களுக்காக கதாபாத்திரங்களை இயக்குனர் மாற்றினாரா? அல்லது தயாரிப்பாளர் படத்தில் புது ஹீரோயின் வேண்டுமென்று நினைத்தாரா? என்பது தெரியவில்லை. முதலில் படத்தின் கதையை என்னிடம் சொல்லும் போது, மீனாவுக்கும் எனக்கும் தனித்தனியாக ரஜினியுடன் டூயட் பாடல்கள் கூட இருந்தது என்று நடிகை குஷ்பு வருத்தத்தோடு பகிர்ந்திருக்கிறார். தற்போது குஷ்புவின் இந்த நேர்காணல் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.






