விபத்து ஏற்பட்டு அன்றாட வாழ்க்கை சீர்குலைந்தால் ஒருவர் என்ன தான் செய்வார் – தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து குஷ்பூ.

0
301
kusboo
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அட்மிட் ஆகி அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் தற்போது மீண்டும் காலில் கட்டுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுளர். . 90 காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. அந்த காலத்திலேயே இவருக்கு ரசிகர்கள் சிலை வைத்து இருந்தார்கள். மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.தற்போது குஷ்பூ அவர்கள் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமா படங்களில் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

இறுதியாக இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூலும் வாரி குவித்து இருந்தது.இதனை தொடர்ந்து குஷ்பூ பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அதேபோல் குஷ்பு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மீரா என்ற சீரியலில் நடித்து இருந்தார்.

இந்த தொடர் பெண்கள் சுதந்திரம், பெண்கள் உரிமை ஆகியவை மையமாக கொண்டதாக இருந்தது. இந்த தொடர் 62 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பானது. சமீபத்தில் தான் இந்த தொடர் முடிவடைந்தது. தற்போது இவர் பாஜக செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். மேலும், குஷ்பு கட்சிப் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் தான் நடிகை குஷ்பூ, மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார்.

-விளம்பரம்-

அவருக்கு coccyx boneல் சர்ஜரி செய்யப்பட்டு இருந்தது. கோக்ஸிக்ஸ் எலும்பு என்பது பொதுவாக நமது பிட்டப் பகுதியில் வால் போன்ற எலும்பு காணப்படும். இதை வால் எலும்பு அல்லது கோக்ஸிக்ஸ் என்று அழைக்கின்றனர். இது நமது முதுகெலும்பின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இது தான் நமது இடுப்பிற்கு சப்போர்ட் ஆக இருக்கும். இந்த எலும்பு இந்த சிறிய வால் எலும்பில் வலி ஏற்பட்டால் தாங்கவே முடியாது. நீண்ட காலத்திற்கு இந்த வலி நீடித்தால் உங்கள் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் அவதி ஏற்படும்.

இப்படி ஒரு நிலையில் மீண்டும் காலில் கட்டுடன் நடிகை குஷ்பூ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ”ஒரு விசித்திரமான விபத்து உங்களுக்கு வலி மற்றும் கட்டுகளை உண்டாக்குகிறது, உங்கள் அன்றாட வழக்கத்தை சீர்குலைக்கிறது, ஒருவர் என்ன செய்வார்? மற்றவர்களைப் பற்றி உறுதியாக தெரியவில்லை, எனது பயணம் தொடர வேண்டும். இலக்கை அடையும் வரை நிறுத்த மாட்டேன் என்று கூறி உள்ளார்.

Advertisement