கொள்ளுப் பாட்டி முதல் பேத்தி வரை – ஒரே வீட்ல 4 தமிழ் ஹீரோயின்ஸ். அட, இந்த நடிகைகள் தானா ? தமிழ் சினிமாவை தன்வசம் வைத்திருந்த குடும்பம்

0
996
lakshmi
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நடிகைகள் கதாநாயகிகளாக வலம் வருவது ஒரு ஆச்சரியமான விஷயம் அந்த வகையில் கூறவேண்டும் என்றால் நடிகை லட்சுமியை சொல்லலாம். இவருடைய அம்மா தான் ருக்மணி. தமிழ் சினிமாவில் இரண்டு ருக்மணிகள் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் ஆர்கே ருக்குமணி மற்றொருவர் குமாரி ருக்மணி. ஆர்.கே ருக்மணி 30 மற்றும் 40 களில் தமிழ் சினிமா மற்றும் நாடனங்களில் சிறந்து விளங்கினார்.

-விளம்பரம்-

குமாரி ருக்மணி :

அதே போல பாரிஸ் பியூட்டி என அழைக்கப்பட்டார் தான் குமாரி ருக்மணி. இவர் தமிழ் சினிமாவில் 30களின் இருந்து 70களின் இறுதி வரையில் சிறந்த நடிகையாக கருதப்பட்டார். குமாரி ருக்மணியின் தாய் ஜானகி அவரும் ஒரு நடிகை தான். இவர்களின் பூர்வீகம் தஞ்சாவூர். நடிகை ருக்மணியும் சிறிய வயதாக இருக்கும் போதே இவர்களின் குடும்பம் சென்னைக்கு குடியேறி வந்துள்ளனர்.

- Advertisement -

சினிமா அறிமுகம் :

இந்நிலையில் மும்பையில் ஹரிச்சந்திரா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்திருக்கிறது. இந்த நேரத்தில் இப்படத்தில் பால்யகால லோகிதாசனாக நடிக்க சரியான குழந்தை நட்சத்திரத்தை படக்குழுவினர் தேடுகையில் இப்படத்தின் கதாநாயகி டி.பி. ராஜலட்சிமி தன்னுடைய அறைக்கு அருகே உள்ள ஒரு அறையில் ருக்குமணி தங்கியிருந்ததை பார்த்துள்ளார். நடிகை ருக்மணியின் சுட்டித்தனமான விளையாடும் அழகும் டி.பி.ராஜலட்சிமி பிடித்துப்போகவே அவரை குழந்தை நட்சத்திரமாக ஹரிச்சந்திரா படத்தில் நடிக்க வைக்கலாம் என்று இயங்குனரிடம் கூறியுள்ளார்.

கதாநாயகி :

ருக்மணியின் தாய் ஜானகியிடம் சம்மதத்தை பெற்றவுடன் ருக்மணியை சிறிய வயது லோகிதாசனாக நடிக்க வைத்துள்ளனர். அந்த படம் தான் ருக்மணி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படம். இந்த படத்திற்கு பிறகு பாலயோகினி, தேச முன்னேற்றம், சிந்தாமணி, ரிஷியசிருங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து விட்டார். இப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ருக்மணி ஸ்ரீவள்ளி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக கதாநாயகியாக நடித்தார்.

-விளம்பரம்-

திருமணம் :

பின்னர் கடந்த 1946ல் இயக்குனர் ஒய்.வி.ராவ் தயாரித்து இயக்கிய படத்தில் இவரே கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டார. இந்த தம்பதிக்கு பிறந்த மகள் தான் நடிகை லட்சுமி. இவர் தன்னுடைய தாயை விட மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். மேலும் எம்.ஜி ஆர், சிவாஜி, சிவகுமார், ஜெய்சங்கர் என அப்போதைய முன்னணி நடிகர்களின் பல படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவை ஒரு பெரிய சுற்று சுற்றினார்.

பிரபலமான நடிகை :

நடிகை லட்சுமி தமிழ் சினிமாவில் மட்டும் நடிக்காமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி என பல மொழிகள் 300க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் நடிகை லட்சுமிக்கு சிறந்த நடிகைக்கான விருதுகளை தமிழ் நாட்டில்மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பெங்காலி என் பல மாநிலங்களிலும் வாங்கியுள்ளார். இந்நிலையில் இவரது மகள் ஐஸ்வர்யாவும் தமிழ் சினிமாவில் நடிகையாக இருக்கிறார். ஆனால் தன்னுடைய அம்மா மற்றும் பாட்டி அளவிற்கு பிரபலமாகவில்லை.

லட்சுமி மகள் :

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் கொள்ளுப்பாட்டி ஜானகி ஒரு நடிகை, அவரது மகள் ருக்மணியும் ஒரு நடிகை, அவரது மகள் லட்சிமியும் தமிழ் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பெயர் வாங்கி நடிகை என்ற நிலையில் தன்னுடைய அம்மா லட்சுமி மற்றும் பாட்டி ருக்மணியின் அர்ப்பணிப்பும் இருந்திருந்தால் நடிகை ஐஸ்வர்யாவும் ஒரு சிறந்த நடிகையாக வந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement