தர்மதுரை போல தரமான படமா ‘கண்ணே கலைமானே’ – விமர்சனம் இதோ.!

0
1828
Kanney
- Advertisement -

தமிழில் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற பல தரமான படங்களை கொடுத்த இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படைப்பு தான் ‘கண்ணே கலைமானே’. இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை தற்போது காணலாம்.

-விளம்பரம்-

படம்:- எல் கே ஜி (LKG)
இயக்குனர்:- சீனு ராமசாமி
நடிகர்கள் : – உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி,பூ ராமு,ஷாஜி ஷென்,வசுந்தரா காஷ்யப்,வெற்றிகுமரன் மற்றும் பலர்.
தயாரிப்பு – உதயநிதி ஸ்டாலின்
இசையமைப்பளார் :- யுவன் ஷங்கர் ராஜா
வெளியான தேதி:- 22-02-2018

- Advertisement -

கதைக்களம் :

அழிந்து வரும் இயற்கை விவசாய முறையை  மீட்டுருவாக்கம் செய்யத்துடிக்கும் வேளாண்படித்த பட்டதாரியாக வலம் வருகிறார் நம்ம ஹீரோ உதயநிதி. தன்னுடைய சொந்த விவசாய நிலத்திலே இயற்கை உரம் தயாரித்து வினியோகம் செய்கிறார். மேலும், செயற்கை உரத்தை தவிர்த்துவிட்டு கிராம மக்கள் அனைவரையும் இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

அறிவுரையோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தனது கிராமத்தில் இருக்கும் பல்வேறு ஏழை விவசாயிகளுக்கு வங்கியில் லோன் வாங்கி கொடுத்து அதற்கு ஜாமீனும் போடுகிறார் உதயநிதி. இந்நிலையில் அந்த வங்கிக்கு அந்த ஊருக்கு வங்கி அதிகாரியாக வரும் தமன்னா (பாரதி) ஒரு நேர்மையான அதிகாரியாக அங்குள்ள விவசாய கடன் வாங்கி கட்டாத பட்டியலில் இருக்கும் அனைவரையும் சந்திக்கிறார்.

அப்போது அந்த வங்கியில் அனைவருக்கும் கடன் பெற்றுக்கொடுத்து ஜாமீன் போட்ட உதயநிதியை நேரில் அழைத்து எச்சரிக்கிறார் தமன்னா. முதலில் மோதலில் தொடங்கும் இவர்களது உறவு உதயநிதியின் நல்ல குணத்தை பார்த்து பின்னர் அவர் மீது காதலில் விழுகிறார் தமன்னா.

ஆனால், இவர்கள் காதலுக்கு உதநிதியின் பாட்டியான
வடிவுக்கரசி எதிர்ப்பு தெரிவிக்கிறார். வேறு ஜாதி என்பதால் தமன்னாவை ஏற்க மறுக்கிறார் வடிவுக்கரசி. உதயநிதி பட்டினி கிடந்து பாட்டியின் மனதை மாற்றி தமன்னாவை திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் இவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பது தான் மீதிக்கதை.

ப்ளஸ் :

மனிதன் படத்திற்கு பின்னர் உதயநிதியின் நேர்த்தியான, பொறுமையான நடிப்பு. அதே போல இந்த படத்தில் தமன்னா அப்படியே தர்மதுறை, தமன்னாவை மிஞ்சிவிட்டார். இருப்பினும் இவர் கிராமபெண்ணாக ஏற்றுக்கொள்ளத்தான் சற்று மனம் மாறுகிறது. மேலும், விவசாயம், நீட் தேர்வு போன்றவற்றை படத்தில் புகுத்தியுள்ளது படத்தின் ப்ளஸ். படத்தின் கடைசி 10 நிமிடம் கொஞ்சம் அழுத்தமாக இருக்கிறது.

சீனு ராம்சியின் கதாபாத்திரத்தேர்வு இந்த படத்திலும் நேர்த்தியாக இருக்கிறது. உதயநிதியின் அப்பாவாக வரும் ‘பூ’ ராம், பாட்டியாக வரும் வடிவுக்கரசி, உதயநிதி தோழியாக வரும் வசுந்தரா போன்றவைகளின் நடிப்பில் நேர்த்தி தெரிகிறது. மேலும் படத்தின் ஒளிப்பதிவு கண்கள் கூசாமல் இருக்கிறது. படத்தின் இசை மேலும் ஒரு பலம்.

மைனஸ் :

படத்தில் மிகப்பெரிய குறை இல்லை என்றாலும் இது ஒரு மிகவும் பொறுமையுடன் பார்க்கவேண்டிய படம். அதிலும் இரண்டாம் பாதியில் எல்லாம் சத்தியமா கமெர்சியல் விரும்பிகளின் பொறுமையை சோதிக்கும்.

இறுதி அலசல் :

இயக்குனர் சீனு ராமசாமி வழக்கம் போல் தர்மதுரை போன்ற ஒரு படத்தை கொடுத்துள்ளார். ஆனால், என்ன இப்படம் சமூக அக்கறையுள்ள கதையை மையப்படுத்தி வந்துள்ளது. ஆபாசம் இல்லாமல், இரட்டை வசனம் இல்லாமல் படம் வருவதே கடினமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் மிகவும் ஒழுக்கமான ஒரு படமாக இப்படம் இருந்தாலும் மிகவும் பொறுமையான அழுத்தமில்லாத கதைக்களம் மற்றும் திருப்பங்கள் இல்லாத ஒரு படம் தான் என்றாலும் இருப்பினும் ஒரு முறை அனைவரும் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படம் இந்த படத்திற்கு Behindtalkies-ன் மதிப்பு 7/10.

Advertisement