தேசிய விருது கொடுத்தவங்க கேட்ட அந்த கேள்வியால இந்த விருத வாங்கனுமான்னே யோசிச்சேன் – எடிட்டர் லெனின்

0
644
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான எடிட்டராக இருப்பவர் பி லெனின். இவர் திரைப்பட தொகுப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் போன்ற பன்முகங்களைக் கொண்டவர். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் புகழ்பெற்ற தமிழ் திரைப்பட படைப்பாளியான ஏ பீம்சிங்கின் மகன் தான் லெனின் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் லெனின் அவர்கள் உதவி பட தொகுப்பாளராக தான் இருந்தார். பின் மகேந்திரனின் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த உதிரிப்பூக்கள் என்ற படத்தின் மூலம் பட தொகுப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பட தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த நதியை தேடி வந்த கடல் என்ற படத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து இவர் பண்ணையபுரத்து பாண்டவர்கள், எத்தனை கோணம் எத்தனை பார்வை, ஊருக்கு 100 பேர் போன்ற பல படங்களை இயக்கியிருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு சில படங்களில் நடிகராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார். மேலும், சினிமாவில் இவருடைய பங்களிப்புக்காக பல விருதுகளை வாங்கி இருக்கிறார். குறிப்பாக, இவர் ஐந்து முறை தேசிய விருதும், தமிழ்நாடு அரசு திரைப்பட விருது, கேரளா அரசு விருது போன்ற பல விருதுகளை வாங்கி இருக்கிறார்.

லெனின் குறித்த தகவல்:

அதிலும் இவருடைய குறும்படமான நாக் கவுட் படம் விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றது. சர்வதேச விருது கூட வாங்கி இருக்கிறது. 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதில் லெனின் இயக்கிய ஆவணப்படமான சிற்பிகளின் சிற்பங்கள் படம் தேர்வாகி இருந்தது. இந்த நிலையில் எடிட்டர் லெனின் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

-விளம்பரம்-

லெனின் பேட்டி:

அதில் அவர் காதலன் படம் குறித்து கூறி இருந்தது, பிரபுதேவா நடித்த காதலன் படத்தில் பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். அந்த பாடலில் பிரபுதேவா உடைய தலை,கை, காலெல்லாம் எடுக்கப்பட்டது போல் காட்டப்பட்டிருக்கும்.இந்த பாடலுக்கு நேஷனல் விருது கொடுத்திருந்தார்கள். அதற்காக நான் போயிருந்தேன். அப்போது அந்த விருது கொடுக்கப்பட்ட காரணம் குறித்து அவர்கள் சொன்னது, எப்படி ஒவ்வொரு காட்சியிலும் தலையை வெட்டி காண்பித்திருந்தீர்கள்.

காதலன் படம் குறித்து சொன்னது:

சிறப்பாக செய்திருக்கிறீர்கள், அற்புதமாக இருக்கிறது என்று சொன்னார்கள். ஆனால், உண்மையில் அது சிஜி மூலம் கிராபிக் செய்தது. நான் ஒவ்வொரு முறையும் தலையை வெட்டி கட் பண்ணி எடுத்திருந்தால் என் வாழ்நாள் முழுவதுமே ஆயிருக்கும். இதனால் அந்த விருது வாங்கலாமா? என்று எனக்கு யோசனை வந்து விட்டது. ஆனால், அந்தப் பாடலுக்கு அது தகுதியான விருது தான் என்று கூறியிருந்தார்.

Advertisement