சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’மனிதன்’ என்ற திரைப்படத்திலும் ’சிவா’ என்ற திரைப்படத்திலும் ரஜினிக்கு தங்கை கேரக்டரில் நடித்தவர் நடிகை மாதுரி. மலையாள படங்களில் கிளாமர் கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற அவர் தமிழில் கிளாமரில் நடித்தாலும் சில குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்துள்ளார். இவர் பின்னாளில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
நடிகை மாதுரி மதுரையை சேர்ந்தவர். அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ’பாவம் கொடூரன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். மாணவி ஒருவர் 40 வயது நடுத்தர நபர் ஒருவருடன் கொண்ட தகாத உறவு கொள்வது தான் இந்த படத்தின் கதை. இந்த படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான நிலையில் இரண்டிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கிளாமர் காட்சிகளுக்காகவே இந்த படம் ஓடியது.
அதன் பிறகு விஜயகாந்த் நடித்த ’அலை ஓசை’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இதனை அடுத்து சில மலையாள படங்களில் கிளாமராக நடித்துக் கொண்டிருந்த நிலையில் தான் அவருக்கு தமிழில் ’சம்சாரம் அது மின்சாரம்’ என்ற படத்தில் குணச்சித்திர கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சந்திரசேகர் ஜோடியாக இந்த படத்தில் நடித்த பிறகுதான் அவர் தமிழில் கிளாமர் இல்லாமல் குணச்சித்திர நடிகையாக மாறினார்.
‘பாலைவன ரோஜாக்கள்’ ’மனிதன்’ ’மேகம் கருத்திருக்கு’ ’ஒரே ரத்தம்’ ’மைக்கேல் ராஜ்’ ’காவலன் அவன் கோவலன்’ ’பரிசம் போட்டாச்சு’ ’வளையல் சத்தம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மேலும் ’பெண்மணி அவள் கண்மணி’ ’குற்றவாளி’ ’காளிச்சரண்’ ’இரண்டில் ஒன்று’ ’சகாதேவன் மகாதேவன்’ ’மூடு மந்திரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகை மாதுரி 80கள் மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்த நிலையில் திடீரென அவர் நடிப்பதை நிறுத்திக் கொண்டதாக கூறப்பட்டது.
திரையுலகினர் அவரை விலக்கி வைத்ததாகவும் அவரே திரையுலகில் இருந்து விலகி விட்டதாகவும் இருவேறு கருத்துக்கள் வெளியாகி இருந்தன. ஒரு கட்டத்தில் அவர் திடீரென பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக கடந்த 2002 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அந்த வழக்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.விபச்சார வழக்கு காரணமாக அவரை எந்த திரைப்படத்திலும் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் விரும்பவில்லை.
சினிமா உலகம் குறித்து நன்கு தெரிந்திருந்தும் அதனை சரியாக கையாள தெரியாமல் மிக உயரத்திற்கு வந்திருக்க வேண்டிய நடிகை மாதுரி மிகப்பெரிய சரிவை சந்தித்ததாகவும் கூறப்பட்டது. சினிமா என்பது ஒரு பணம் கொழிக்கும் தொழில்துறை. அந்த தொழிலை மிகவும் கவனத்துடன் சிறப்புடன் செய்தால் மிகப்பெரிய உச்சத்துக்கு செல்லலாம், ஆனால் சிறிது சறுக்கினாலும் என்ன ஆகும் என்பதற்கு நடிகை மாதுரி ஒரு உதாரணமாக திகழ்ந்தார் என்று திரை உலகினர் கூறுவது உண்டு.