விடாமுயற்சி படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.
இப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் பின் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். ஏற்கனவே அஜித்- திரிஷா இருவரும் இணைந்து ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் விடாமுயற்சி படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
விடாமுயற்சி படம்:
இவர்களுடன் இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இதற்கிடையில் விடாமுயற்சி கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் இறந்தார். இதனால் விடாமுயற்சி படகுழுவினருக்கு பேர் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. அவருடைய மறைவிற்கு பிறகு பட வேலைகள் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலையில் விடாமுயற்சி சூட்டிங் ஸ்பாட் வீடியோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், அஜித் அவர்கள் காரில் ஸ்டண்ட் செய்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
அஜித் மேனேஜர் பதிவு:
இருந்தாலும், அஜித் பயப்படாமல் ஒன்றுமில்லை நன்றாக இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலருமே வருத்தத்தில் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த விபத்து குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் ஷூட்டிங் நடந்தது. அதில் ஒரு காட்சியில், அஜித் சார் காரை வேகமாக ஓட்டி அவருக்கு முன்னாடி சென்ற காரை விரட்டி பிடிக்க வேண்டும். அதுக்காக அஜித் சார் தன்னுடைய காரை பயங்கர ஸ்பீடாக ஓட்டும் சீனை எடுத்தாங்க.
Vidaamuyarchi filming
— Suresh Chandra (@SureshChandraa) April 4, 2024
November 2023.#VidaaMuyarchi pic.twitter.com/M210ikLI5e
விபத்து குறித்து சொன்னது:
சேஸிங் சீன் என்பதால் ட்ரோன் வெச்செல்லாம் படமாக்கி இருந்தார்கள். காருக்குள்ளேயும் மினி கேமரா வைத்து எடுத்திருந்தார்கள். அந்த சீனில் கார் கவிழ்ந்து விட்டது. மொத்த யூனிட்டுமே பதறி போய் விட்டது. அஜித் சார் வேகமாக வரும் போது யாரும் எதிர்பாக்காத விதமாக அப்படியே ஸ்கிட் ஆகிவிட்டது. ரோடில் இருந்து உருண்டு 20 அடி பள்ளத்தில் விழுந்தது. சாரை தான் பார்க்க போனோம். அதற்குள் அங்கிருந்து எனக்கும் போன் வந்துவிட்டது. போன் செய்தவர்கள் எல்லோருமே ஆக்சிடன்ட் ஆயிடுச்சு. அஜித் சார் பேசிய பிறகு தான் எனக்கு மூச்சு நிம்மதியானது. அஜித் சார் ஓட்டின வண்டி ஹம்பர் கார் என்பதால் அவருக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இல்லாமல் காரில் இருந்து வெளியே வந்துவிட்டார்.
படம் குறித்த அப்டேட்:
உடனே மெடிக்கல் செக்கப் போன் செய்து ஒன்னும் ஆகவில்லை என்று தெரிந்த பிறகுதான் ஷூட்டிங்கில் தொடர்ந்து இருந்தார்கள். இந்த வீடியோவை இப்ப வெளியிடுவதற்கு காரணம் என்னவென்றால், நடிகர்கள் இப்படி ரிஸ்க் எடுத்து நடிக்கிறார்கள். ஆனால், பலருமே படம் டிராப் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். அதில் உழைத்த அத்தனை பேருக்குமே மனது எவ்வளவு கஷ்டமாக இருக்கும். அதனால் ரசிகர்களும் படத்தோட டீமுக்கும் மன தெம்பையும் உற்சாகமும் அளிக்கும் விதமாகத்தான் இந்த வீடியோவை வெளியிட்டும். விடாமுயற்சி டீம் அடுத்த செடியூலுக்கு கிளம்ப ரெடியாகி இருக்கிறார்கள். தேர்தல் முடிந்த அடுத்த நாளே வெளிநாடு போகிறார்கள். இதுவரையும் 60% படப்பிடிப்பு முடிந்து விட்டது. அனிருத் பாடல்கள் கொடுத்த பிறகு படப்பிடிப்பிற்கு சென்று விடுவார்கள். இந்த படத்தை அக்டோபரில் வெளியிடப்பட குழு திட்டமிட்டு இருக்காங்க என்று கூறியிருக்கிறார்.