அந்த சர்ஜரியால் தான் என் உடல் எடை கூடி விட்டது – உடல் கேலி குறித்து மஞ்சிமா சொன்ன அட்வைஸ். நிச்சயம் படியுங்க.

0
2148
manjima
- Advertisement -

பொதுவாகவே சினிமா துறையில் திருமணமானால் ஹீரோயினியாக நடிக்க முடியாது. கொஞ்சம் எடை போட்டால் இவர்கள் ஹீரோயினாக நடிக்க தகுதி இல்லை என்று பல விதிகள் உண்டு. அதில் ஜோதிகா, அபர்ணா உட்பட சில நடிகைகள் அதை தகர்த்தெறிந்து சாதித்து வருகிறார்கள். நடிகை என்றாலே நிறம், சைஸ் ஸீரோ உடல்வாகு இதெல்லாம் தான் தகுதி என்று சொல்லப்படும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. எவ்வளவுதான் திறமை இருந்தாலும் அதெல்லாம் இரண்டாம்பட்சம் தான். முதலில் நிறமும், அழகும், உடல்வாகும் தான் முக்கியம் என்ற நிலைமைக்கு தற்போது உள்ள சினிமா தள்ளப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Manjima Mohan: Manjima Mohan reminisces the time when she was recovering  from her leg injury, says “Trust yourself!” | Malayalam Movie News - Times  of India

அதில் பல ஹீரோயினிகள் திறமை இருந்தும் வெளிப்படுத்த முடியாமல் காணாமல் போய்விட்டார்கள். அந்த வகையில் காணாமல் போயிருக்க வேண்டியவர் தான் நடிகை மஞ்சிமா மோகன். மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் தோன்றியது. அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில படங்களில் நடித்து வந்தார். பிறகு சிலகாலம் மீடியாவில் இருந்து ஒதுக்கி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை மஞ்சிமா மோகன் அவர்கள் தன் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பது, நடிகைகளும் மனிதர்கள் தான். சாதாரண மனிதர்கள் சந்திக்கும் உடல்-மன ரீதியான பிரச்சனைகள் எல்லாம் நாங்களும் சந்திக்கிறோம். ஆனால், எங்களை ட்ரோல் செய்பவர்களுக்கு அந்த யதார்த்தம் புரிய மாட்டேங்குது. எனக்கு 2019 ஆம் ஆண்டில் காலில் ஒரு சர்ஜரி நடந்தது. அதற்குப் பிறகு எனக்கு கடுமையான முதுகுவலி, ட்ரீட்மென்ட் என்று நான் அலைந்து கொண்டிருந்தேன். அதில் எனக்கு கொஞ்சம் வெயிட் போட்டு விட்டது. இதனால் பல பேர் என்னை வைத்து சோசியல் மீடியாவில் ரோல் செய்து வந்தார்கள். இது எனக்கு பெரிய மன அழுத்தத்தை கொடுத்தது. ஒரு கட்டத்திற்கு மேல் நான் அதை ஏற்றுக்கொள்ள பழகிவிட்டேன்.

நடிகைகள் என்றால் குண்டாக இருக்க கூடாதா? கொஞ்சம் உடம்பு குறைந்தால் போதும் என்ன உடல் நிலை சரியில்லையா? என்றும் கொஞ்சம் வெயிட் போட்டால் ஏன் இவ்வளவு குண்டாக ஆகிவிட்டீர்கள் என்றும் பல கேள்விகளை சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகிறார்கள். இதெல்லாம் பாதிக்கக்கூடாது என்பதற்காக நான் என்னை சமாதானம் செய்து கொண்டேன். அதற்க்காக நான் இப்படித்தான் இருப்பேன் என்று சொல்ல வரவில்லை. எந்த படத்திற்கு எப்படி இருக்க வேண்டுமோ அந்த படத்திற்கு ஏற்ற மாதிரி உடல் பருமனை மாற்றிக் கொள்வது ஒன்றும் தவறில்லை. இப்போது நான் வெயிட் லாஸ் முயற்சிகளை தீவிரமாக செய்துவருகிறேன்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இன்னைக்கு எத்தனையோ குழந்தைகள் எதை சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்க என்ன சாப்பிடணும் கேட்பதை விட அழகுக்காக என்ன சாப்பிடலாம் என்ற பதிந்துவிட்டது. இதெல்லாம் கூடிய விரைவில் மாறனும். உடலும் மனமும் சீராக இருந்தால் தான் நாம் எந்த ஒரு செயலையும் செய்ய முடியும் என்று மனம் திறந்து தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை பகிர்ந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மஞ்சிமா மோகன் துக்ளக் தர்பார், எஃப்.ஐ.ஆர் படத்தில் நடித்து உள்ளார்.

Advertisement