தமிழ் சினிமாவின் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த எத்தனையோ நடிகர் நடிகைகள் தற்போது அட்ரஸ் இல்லாமல் இருக்கின்றனர். 90ஸ் காலகட்டத்தில் நடித்த நடிகைகள் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருக்கிறது. அந்த வகையில் 90ஸ் நடிகை சித்ராவை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. நடிகை சித்ரா 1965ஆம் ஆண்டு கேரளாவின் கொச்சியில் பிறந்தவர். இவர் 1975ஆம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் சேரன் பாண்டியன், சின்னவர், பொண்டாட்டி ராஜ்ஜியம், திருப்புமுனை, என் தங்கச்சி படிச்சவ, ஊர் காவலன் என பல தமிழ் படங்களில் நடித்தார்.இவருக்கு நல்லெண்ணெய் சித்ரா என்ற ஒரு பெயரும் உள்ளது. நல்லெண்ணெய் கம்பெனியின் விளம்பரத்தில் நடித்து புகழ்பெற்றதால் இவருக்கு இந்த பெயர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு பின்னர் கூட இவர் தொடர்ந்து நடித்து வந்தார். மேலும், இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். சித்ராவிற்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகள் இருக்கிறார். கடந்த சில ஆண்டாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சென்னை சாலிகிராம் நகரில் தனது வீட்டிற்கு எதிரில் ஒரு ஹோட்டல் துவங்கி இருந்தார்.
இந்த ஹோட்டலுக்கு சி.எஸ் சிக்கன் என பெயர் வைத்துள்ளார். கடை கல்லாவிலும் உட்கார்ந்து கொண்டு வீட்டையும் கவனித்துக்கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார் சித்ரா. அவரது ஹோட்டலின் சிறப்பம்சம் என்னவென்றால், ஆடர் செய்தால் நம் வீடு தேடி உணவு வந்துவிடும்.