பாடலுக்கு இசையா? மொழியா? என்று பார்த்தால் – கங்கை அமரன் ஜேம்ஸ் வசந்தன்

0
97
- Advertisement -

சமீபத்தில் நடந்த படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து, சமீப காலமாக இசை பெரிதா? பாடல் வரிகள் பெரிதா? என்ற பிரச்சனை தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறது. இசையும், பாடல் வரிகளும் சேர்ந்தால் தான் நல்ல பாடல் உருவாகும். ஆனால், சில நேரங்களில் இசையை விட மொழி சிறந்ததாக இருக்கிறது. இதை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று பேசி இருந்தார். இப்படி இவர் பேசி இருப்பது தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இதை பார்த்த பலருமே இவர் இசைஞானி இளையராஜாவை தான் மறைமுகமாக விமர்சித்து பேசி இருக்கிறார் என்று விவாதங்கள் எழுப்பி இருந்தார்கள். இது குறித்து கங்கை அமரன், எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போல பேட்டி கொடுப்பதா? மனிதனுக்கு நன்றி வேண்டும். அவருடைய பாடலுக்கு அதிகமாக புகழ் வந்ததால் கர்வம் தலைக்கேறி விட்டது. அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

கங்கை அமரன் வீடியோ:

வைரமுத்துவை வாழ வைத்தது இளையராஜா தான். இதனால் இளையராஜாவின் போட்டோவை வைத்து தினமும் வைரமுத்து வணங்க வேண்டும். இளையராஜா இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரை இருந்திருக்காது. நான் அவருக்கு சவால் விடுகிறேன். இளையராஜா இசையில் நீங்கள் எழுதிய பாடல்களை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள், அது முடியாது. இசையில்லாமல் பாடல்கள் கிடையாது. தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருக்கிற கவிஞர்கள் இங்கே யார் இருக்கிறார்? அதை இவர் தான் செய்கிறார்.

வைரமுத்து குறித்து சொன்னது:

நான் தான், நான் மட்டும் தான் என இருக்கிறார் வைரமுத்து. இளையராஜா குறித்து சின்ன குற்றமோ, குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஆவேசமாக பேசியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேட்டியில், பாடல் என்பது இசையும், மொழியும் தானே? அதை எப்படி பிரித்து பார்க்க முடியும். நம்முடைய தனிப்பட்ட ஆளுமைகளை பற்றி பேசவில்லை, விமர்சிக்கவில்லை.

-விளம்பரம்-

ஜேம்ஸ் வசந்தன் பேட்டி:

ஏன்னா, அதனால் ஒரு பயனும் கிடையாது. ஆனால், பாடலுக்கு இசையா? மொழியா? என்று பார்த்தால் இசையில்லாமல் பாடலில்லை, பாடல் இல்லாமல் இசை இல்லை. இப்படி பிரிக்க முடியாத இரண்டை வைத்துக்கொண்டு எதற்காக இப்படி பேசிக்கொண்டு இருக்காங்கன்னா அது தனிப்பட்ட மோதல். இரண்டு ஆளுமையின் உரசல்கள். அதில் நமக்கு பெரிதாக உடன்பாடு கிடையாது. பாட்டை ரசிக்கிற பாமரனுக்கு கூட சில பாட்டை ரசித்தாலும் அவருக்கு என்ன படம் என்று தெரியாது.

இசை குறித்து சொன்னது:

எம்ஜிஆர் படம் என்றால் அவருடைய கொள்கை பாடல்கள், சிவாஜி என்றால் தத்துவ பாடல்கள், கமல்- ரஜினி என்றால் காதல் பாடல்கள், இன்றைய தலைமுறைக்கு பாட்டு நன்றாக இருந்தாலே போதும் என்றும் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சுப்பிரமணியம் திரைப்படத்தில் என்னோட கண்கள் இரண்டாய் பாடல் படம் வெளியாவதற்கு முன்பே பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அந்தப் படத்தில் யாருமே ரசிகர்களுக்கு தெரிந்தவர்கள் கிடையாது. இருந்தாலும் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இதற்கு காரணம் இசையா? வரியா? சொல்லுங்க பார்ப்போம். இப்படி பாடலைக் கொண்டாடுகிற ரசிகர்களுக்கு இசையா? மொழியா? என்று எப்படி பிரிக்க முடியும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

Advertisement