குட்டி அசின் பூர்ணவிற்க்கு பிறந்த குழந்தை – மகனுக்கு துபாய் இளவரசரின் பெயர்.

0
443
- Advertisement -

நடிகை பூர்ணாவின் குழந்தைக்கு பெயர் வைத்திருக்கும் விழா நடைபெற்று இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்தியா சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம். இவர் முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்தவர். சினிமாவிற்காக இவர் தன் பெயரை பூர்ணா என்று மாற்றி கொண்டார். மேலும், இவரை பலரும் குட்டி அசின் என்று தான் அழைத்தனர். இவர் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், அதற்கு முன் இவர் மலையாளத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான ‘மஞ்சு போலொரு பெண்குட்டி’ என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் நிறைய பட வந்து இருந்தது. அதற்கு பிறகு இவர் தமிழில் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, கொடி வீரன், சவரக்கத்தி, காப்பான் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இவரை ரசிகர்கள் பலரும் குட்டி அசின் என்றே அழைத்து வந்தனர். இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் பூர்ணா தவித்து கொண்டு இருந்தார்.

- Advertisement -

பூர்ணா திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. பின் இவர் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று இருந்தார். இதை தொடர்ந்து மீண்டும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழில் பூர்ணா நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்த விசித்திரன் படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

பூர்ணா நடித்த படங்கள்:

இது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஜோசப் என்கிற படத்தின் தமிழ் ரீமேக். பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்கே சுரேஷ் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். பின் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்து இருந்த நெஞ்சுக்கு நீதி படத்தில் பூர்ணா நடித்திருந்தார். தற்போது வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கும் தசரா படத்தில் பூர்ணா நடித்து இருக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பூர்ணா திருமணம்:

இதனிடையே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடிகை பூர்னாவிற்கும் துபாயை சேர்ந்த தொழிலதிபர் Shanid Asif Ali என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் பூர்ணா- Shanid Asif Aliகும் திருமணம் நடந்தது. Shanid Asif Ali துபாயை சேர்ந்த ஜே பி எஸ் குழுமம் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆவர். இவர்களுடைய திருமணம் துபாயில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தார்கள். இதனை எடுத்து நடிகை பூர்ணாவின் வளைகாப்பு புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

பூர்ணா குழந்தையின் பெயர்:

இந்த நிலையில் பூர்ணாவிற்கு துபாயில் உள்ள ஹாஸ்டர் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பூர்ணா சோசியல் மீடியாவில் பகிர்ந்து, தனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் பூர்ணா குழந்தையின் பெயர் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, நடிகை பூர்ணா தன்னுடைய குழந்தைக்கு ஹம்தான் என்று பெயர் வைத்திருக்கிறார். ஹம்தான் என்பது துபாய் பட்டத்து இளவரசின் பெயர். தற்போது இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement