‘சிம்புவை வீழ்த்திய சூரி’ புது பஞ்சாயத்தை கிளப்பிய ப்ளு சட்டை மாறன் – கொந்தளிப்பில் Str ரசிகர்கள்

0
255
Bluesattai
- Advertisement -

சிம்புவை சூரி வீழ்த்தி விட்டார் என்று ப்ளூ சட்டை மாறன் பதிவிட்ட பதிவை பார்த்து சிம்பு ரசிகர்கள் கொந்தளித்து போயிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூரி. இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி படத்தில் போராளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, சேத்தன், தென்றல் ரகுநாதன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் உருவாகியிருக்கிறார். அதில் முதல் பாகம் தான் கடந்த வாரம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

- Advertisement -

விடுதலை படம்:

மேலும், படத்தைக் குறித்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் சூரியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் சூரியை பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த படம் வெளியாகுவதற்கு முன்பே சிம்பு நடிப்பில் பத்து தல படம் வெளியாகியிருந்தது. ஆனால், இந்த படம் கலவியான விமர்சனங்களை பெற்றிருந்ததாக கூறியிருந்தார்கள்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:

மேலும், சிம்புவின் பத்து தல படம் வந்திருந்தபோது ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்திருந்தார். அதில் அவர் வழக்கம்போல் படத்தை கேவலமாக திட்டியும், சிம்புவை டம்மி பீஸ் என்றெல்லாம் கலாய்த்தும் இருந்தார். ஏற்கனவே வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் யோகிபாபுவுக்கும் சிம்புவுக்கும் வித்தியாசமே இல்லை என்றெல்லாம் சிம்புவின் மனது நோகும்படி ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து பேசி இருந்தார். அதேபோல் தற்போது பத்து தல படத்தையும் பார்த்து சிம்புவை கேலி கிண்டல் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

ப்ளூ சட்டை மாறன் டீவ்ட்:

பின் சூரியின் விடுதலை படத்தை பார்த்து ப்ளூ சட்டை மாறன் பாராட்டி தள்ளி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சிம்புவை சூரி வீழ்த்தி விட்டார் என்றும், மாநாடு படத்திற்கு பின்பு சிம்பு நடித்த மஹா, வெந்து தணிந்தது காடு படங்கள் எல்லாம் தோல்வி சந்தித்து இருக்கிறது என்று வெறுப்பேற்றும் வகையிலும் ப்ளூ சட்டை மாறன் டீவ்ட் ஒன்றை போட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து சிம்புவின் ரசிகர்கள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள்.

பத்து தல படம்:

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் சிம்பு. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பத்து தல. இந்த படத்தை ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கவுதம் மேனன், ப்ரியா பவானி சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். கன்னடத்தில் வெளிவந்த மஃப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல. நீண்ட எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் சிம்புவின் பத்து தல படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

Advertisement