மூன்று மகள்களில் பாரதி ராஜா தேர்ந்தெடுத்த நாயகி,இளம் வயதிலேயே சிவாஜிக்கு ஜோடி – பிறந்தநாளில் அறிவோம் ராதா.

0
1530
- Advertisement -

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ராதா குறித்து பலரும் அறிந்திடாத தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ராதா. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் கதாநாயகியாகவே நடத்தி இருக்கிறார். மேலும், 80, 90 காலகட்டத்தில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக ராதா திகழ்ந்தார்.

-விளம்பரம்-

இவருடைய சகோதரி நடிகை அம்பிகா. இவரும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான். அதோடு நடிகை ராதா அவர்கள் சிவாஜி, ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் நடனம், வசனம் என தனித்துவமான திறமையால் ரசிகர்கள் மத்தியில் கவர்ந்திருக்கிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

- Advertisement -

ராதா குடும்பம்:

இதனிடையே கடந்த 1996 ஆம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரை ராதா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா, விக்னேஷ், துளசி என்று மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதோடு இந்திய சினிமா உலகிலேயே குறைவான காலகட்டத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஒரே நடிகை என்ற சாதனையும் பெற்றிருக்கிறார். இந்நிலையில் இன்று ராதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. ஆகையால், ராதா குறித்து பலரும் அறியாத சுவாரசியமான தகவலை பற்றி இங்கு பார்க்கலாம்.

ராதா குறித்த தகவல்;

அம்பிகாவை ஒரு முறை அவருடைய அம்மா மலையாளத்தில் பாரதிராஜா இயக்கும் திரைப்படத்திற்கு அழைத்து சென்றார். அப்போது அவர் பார்ப்பதற்கு மலையாள பெண்ணாக இருந்ததால் வாய்ப்பு கொடுக்கவில்லை. பின்னர் அவருடையஅம்மா தன்னுடைய மூன்று மகள்களின் புகைப்படத்தை பாரதிராஜாவிடம் காண்பித்தார். அப்போது ராதாவை பார்த்து இந்த பெண் என்னுடைய படத்திற்கு சரியாக இருப்பார் என்று பாரதிராஜா கூறினார்.

-விளம்பரம்-

சினிமா வாய்ப்பு:

உடனே இந்த தகவலை வீட்டில் வந்து ராதாவிடம் அவருடைய அம்மா சொன்னார். பின் ராதாவும் படத்தில் நடித்த சம்மதிக்க ஒத்துக் கொண்டதால் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தார் ராதா. ஆனால், இந்த படத்தில் பானுமதி தான் முதலில் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சினை காரணமாய் அவரால் நடிக்க முடியவில்லை. அலைகள் ஓய்வதில்லை படம் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகை ராதா ஒன்பதாம் வகுப்பு படித்திருந்தார்.

ராதா குறித்ததகவல்:

மேலும், இவருடைய உண்மையான பெயர் உதயசந்திரிக்கா. சினிமாவிற்காக ராதா என்று மாற்றிக்கொண்டார். அதற்கு காரணம் பாரதிராஜா தான். சிவாஜிகணேசன் உடன் முதல் மரியாதை படத்தில் இணைந்து நடித்த ராதாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ராதா நடிப்பு பாரதிராஜாவுக்கு திருப்பி தரவில்லை என்பதால் ராதா மெனக்கட்டு இந்த படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு ராதா உடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு இருந்தது. திருமணத்திற்குப் பிறகு ராதா பெரிதாக எந்த படமும் காணவில்லை. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக இவர் திரைத்துறையை விட்டு விலகி இருக்கிறார். தன்னுடைய கணவரின் பிசினஸ் விஷயங்களில் பார்ப்பதற்கு இவருக்கு நேரம் இருப்பதால் நடிக்க எண்ணம் இல்லை என்றும் சொல்லிவிட்டார். இருந்தாலும் ராதா திரைத்துறையை விட்டு விலகி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இன்று ராதாவின் பிறந்த நாள் என்று ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement