ஒரு வேல இருக்குமோ – விஜய் டிவி பிரபலத்தின் பிறந்தநாளில் ரவீனா பதிவிட்ட புகைப்படம். முடிச்சி போட துவங்கிய ரசிகர்கள்

0
4717
- Advertisement -

மணிச்சந்திரா- ரவீனா இடையே காதல் குறித்த விவகாரம் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரவீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக மீடியாவிற்குள் நுழைந்தார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். அதற்கு பின் இவர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த தீரன் அதிகாரம் ஒன்று” என்ற படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படத்தின் மூலம் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்த்திழுத்தார் ரவீனா. இந்த படத்தில் இவர் அம்மு அபிராமியின் பள்ளித் தோழியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது. மேலும், ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் கூட இவர் தான் நடித்தார். இப்படி இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

ரவீனா நடிக்கும் சீரியல்கள்:

ரவீனா ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து இருந்தார். மேலும்,இவர் நடிகை மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சி என பலவற்றிலும் கலந்து தன் திறமையை காண்பித்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மௌன ராகம் 2’ என்ற தொடரில் நடித்து இருக்கிறார் ரவீனா. முதல் சீசனை போல இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

சோசியல் மீடியாவில் ரவீனா:

இந்த தொடரில் சக்தி என்னும் ரோலில் ரவீனா நடித்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாக ரவீனா கலந்து கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, ரவீனா எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருக்கிறார்.

-விளம்பரம்-

ரவீனா-மணி சந்திரா காதல்:

இதில் இவர் பதிவிடும் வீடியோ,புகைப்படம் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது. அதிலும் கடந்த சில நாட்களாக நடன இயக்குனர் மணியுடன் தான் எல்லா இடத்திற்கும் சென்று வருகிறார். அவருடன் அடிக்கடி பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார் ரவீனா. அந்த வகையில் நடன இயக்குனர் மணியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ரவீனா, மணியுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலர் ரவீனா-மணி சந்திரா இருவரும் காதலிக்கிறீர்களா? என்று ரசிகர்கள் பலரும் கமெண்டில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

ஏற்கனவே காதலிக்கும் மணி :

ஆனால், ஒரு சிலர் அதற்கு வாய்ப்பு இல்லை. ஏற்கனவே மணி சந்திராவிற்கு ஆள் இருக்கிறது என்றெல்லாம் கூறுகிறார்கள். இன்னும் சிலர், இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்தான். எப்போதும் இப்படித்தான் இவர்கள் புகைப்படம் வெளியிட்டு வருகிறார்கள் என்று ஆறுதலாக கமாண்டுகளை போட்டு வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்று ரவீனா-மணி சந்திரா சொன்னால் தான் தெரியும்.

Advertisement