போன் நம்பர் தரவா, மனைவியை பொதுவெளியில் திட்டிய கருணாஸ்,காரணம் அவரின் மாத்திரை பழக்கம்.

0
2158
Karunas
- Advertisement -

தன்னுடைய மனைவியின் உடல்நிலை குறித்து கருணாஸ் பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் கருணாஸ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இசை அமைப்பாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழக அரசியல்வாதியும் ஆவார். சூர்யா நடிப்பில் வெளிவந்த ’நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

-விளம்பரம்-

இந்த ஒரு படத்திலேயே இவர் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். பின்னர் கருணாஸ் அவர்கள் வில்லன், புதிய கீதை, திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறனை காண்பித்து இருந்தார். பின் ‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘சாந்தமாமா’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார் கருணாஸ்.

- Advertisement -

இறுதியாக 2013 ஒரு ஆண்டு வெளிவந்த ரகளபுரம் படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். அதற்கு பின் இவர் ஹீரோவாக நடிக்கவில்லை. தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதே போல இவர் அரசியலில் அதிக ஈடுபட்டு காட்டி வருகிறார். இதனிடையே கருணாஸ் அவர்கள் பாடகி கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிரேஸ் அவர்கள் சினிமாவில் பல படங்களில் பாடி உள்ளார். இவர் அதிகம் தன் கணவன் நடித்த படங்களில் பாடி இருக்கிறார்.

கருணாஸ் குடும்பம்:

பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். பின் இவர் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார். மேலும், நடிகர் கருணாஸ் –கிரேஸ் ஆகிய தம்பதியினருக்கு ஒரு மகள், மகன் உள்ளார்கள். மகன் பெயர் கென். இவரும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் கருணாஸ் மகள் டயானாவின் திருமணம் நடந்தது.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் கருணாஸ் சொன்னது:

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கருணாஸ் கலந்திருந்தார். அதில் அவர், இப்போதெல்லாம் எதுக்கெடுத்தாலும் மாத்திரை சாப்பிட்டு உடம்பை கெடுத்து கொள்கிறோம். என் பொண்டாட்டி எல்லாம் ஒரு சூட்கேஸ் நிறைய மாத்திரை வைத்திருக்கிறார். அதில் நிறைய ஜுவல்ஸ் ,மேக்கப் ஐட்டங்கள் இருக்கிறது என்று தான் எல்லோரும் நினைத்து இருக்கிறார்கள். ஆனால், அதெல்லாம் உண்மை இல்லை. அந்த சூட்கேஸ் முழுவதும் மாத்திரை தான் இருக்கிறது. இப்ப இந்த கூட்டத்தில் நான் என் பொண்டாட்டி நம்பர் தருகிறேன்.

கிரேஸ் குறித்து சொன்னது:

நீங்க என் மனைவிக்கு கால் பண்ணி ஏதாவது உடம்பில் பிரச்சனை என்று சொல்லுங்க. உடனே மாத்திரை பெயரை சொல்லி விடுவார். இத்தனைக்கும் என் மனைவி இன்னும் எம்பிபிஎஸ் எல்லாம் படிக்கவில்லை. ஆனால், எல்லா வியாதிக்கும் மருந்து சொல்லுவார்கள். ஏன்னா, எல்லா வியாதிக்கும் மருந்து மாத்திரை வாங்கி பழகிவிட்டார். மாடர்ன் செயல் என்று சொல்லிக் கொண்டு நாம செய்ற செயலால்தான் நம்முடைய உடம்பு கெட்டுப் போகிறது என்று கருணாஸ் பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும், உங்களுடைய மனைவிக்கு இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா? அதனால் தான் அவருக்கு பல மாத்திரைகள் பேர் தெரிகிறதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement