கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’ இன்று (ஜூன் 18) Netflix Ott தளத்தில் வெளியாகியுள்ளது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 190 நாடுகளில் 17 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படம் Netflix-ல் 2 மணி நேரம் 37 நிமிடம் ஓடியுள்ள இந்த படத்தை பற்றிய முழு விமர்சனத்தை தற்போது காணலாம்.
கதை :
படம் ஆரம்பிக்கும் போதே லண்டனில் இரண்டு கேங்ஸ்டர்களுக்கு இடையிலான சண்டையை காண்பிக்கிறார்கள். அதில் தமிழ் தாதாவை சேர்ந்த கேங் லண்டன் தாதா கேங்கில் இருக்கும் ஒருவவரை கொலை செய்துவிடுகிறது. அப்படியே தமிழ் நாட்டில் தாதாவாக இருக்கும் தனுஷை காண்பிக்கிறார்கள். அவரது இன்ட்ரோவும் ஒரு கொலையுடன் துவங்குகிறது. மேலும், பரோட்டா கடை நடத்தி வருகிறார் தனுஷ். இப்படி ஒரு நிலையில் லண்டன் தாதா கேங்கில் தமிழ் தாதாவை எதிர்க்க ஒரு தமிழ் தாதாவை வரவழைக்க முடிவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் இருக்கும் சுருளியின் பெயர் அடிபட அவருக்கு பணம் கொடுத்து லண்டன் அழைத்து செல்கின்றனர். பின்னர் யாரை கொள்ள அவரை லண்டன் அழைத்து சென்றனர். அந்த இரண்டு கேங்கிற்கும் நடுவே என்ன பிரச்சனை ? இதில் தனுஷ் யார் பக்கம் இருக்கிறார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.
பிளஸ் :
படத்தின் முக்கிய பிளஸ் வழக்கம்போல தனுஷின் நடிப்பு தான். அதற்கு பின் படத்தின் பலம் என்றால் சந்தோஸ் நாராயணனின் இசை தான்.
படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.
படத்தின் முதல் பாதியில் வரும் வசனங்களும், காமெடி காட்சிகளும் நன்றாக ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது. ஆனால் பாபா பாஸ்கர் கொஞ்சம் நேரம் தான் வருகிறார்.
கார்த்திக் சுப்புராஜ் படம் என்பதால் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் பற்றி சொல்ல வேண்டியது இல்லை.
மைனஸ் :
முதல் பாதி சூப்பர் இரண்டாம் பாதி சுமார், இரண்டாம் பாதியில் சுமாரான திரைக்கதை.
இரண்டாம் பாதியில் எதோ அரைத்த மாவையே அரைத்தது போல இருக்கிறது. அதே போல படம் நீளமாக செல்கிறது.
இத்தனைக்கும் படத்தில் புஜ்ஜி, நேத்து போன்ற பாடல்கள் படத்தில் இடம் பெறாத போதிலும் படம் 2 மணி நேரத்துக்கு மென் ஓடுகிறது. பல புதிய முகங்கள் அதனால் கதாபாத்திரத்தின் மீது பெரிதாக பிடி கிடைக்கவில்லை.
இறுதி அலசல் :
தொடர்ந்து கேங்ஸ்டர் கதைகளை எடுத்து வந்த கார்த்திக் சுப்புராஜ், இந்தமுறை இனவெறி அரசியலையும் புலம்பெயர்ந்து செல்பவர்களின் பிரச்சனையையும் கூடுதலாக பேச முயற்சித்து இருப்பது சிறப்பு தான் என்றாலும் படத்தின் மையக்கரு மற்றும் தொய்வான திரைக்கதை படத்தை கொஞ்சம் சுவாரசியம் குறைவாக மாற்றி இருக்கிறது. மொத்தத்தில் ஜகமே தந்திரத்தில், கார்த்திக் சுப்புராஜின் தந்திரம் கொஞ்சம் சறுக்கியுள்ளது. இந்த படம் திரையரைங்கில் வெளியாகவில்லையே என்ற வருத்தம் கண்டிப்பாக படம் பார்த்தபின் இருக்காது.