தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு வெளி வந்த “செம்பருத்தி” படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகம் ஆனவர். அதன்பின்னர் சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அடிமை சங்கிலி, என் ஆசை ராசாவே, ஊட்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சினிமா உலகில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆன ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள்.
நடிகை ரோஜா அவர்கள் தற்போது நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வருகிறார். நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்து தற்போது ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினராக ரோஜா இருக்கிறார். தற்போது ரோஜா மீது சொந்த கட்சியினரே தாக்குதல் நடத்த முயன்று இருப்பதாக ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆந்திர மாநிலத்திலும், தெலுங்கானாவிலும் செயல்படும் வரும் முக்கியமான அரசியல் கட்சியாகும். இந்த கட்சியை சிவகுமார் என்பவர் தான் 2009 ஆம் ஆண்டு நிறுவினார் என்று கூறப்படுகிறது.
இதையும் பாருங்க : இரும்பு பைப்புகள், ஹாக்கி மட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் எங்களைத் தாக்கினார்கள்-கண்ணீருடன் கூறிய மாணவர்கள்.
சமீப காலமாகவே நடிகை ரோஜா அவர்கள் சினிமா துறையை விட்டு முற்றிலுமாக விலகி முழு நேர கவனமும் அரசியலில் செலுத்தி வருகிறார். இவர் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நகரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். தற்போது ரோஜா அவர்கள் நகரி சட்டமன்ற உறுப்பினராகவும், ஆந்திர மாநில தொழில்துறை உட்கட்டமைப்பு கழக தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சித்தூர் மாவட்டத்தில் கே.வி.புரத்தில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் கிராம தலைமை செயலகத்தை திறந்து வைப்பதற்காக ரோஜா அங்கு சென்று உள்ளார்.
அப்போது சித்தூர் மாவட்டம் கே.வி.புரத்தை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகரான மண்டல ஒன்றியக் குழு உறுப்பினர் அம்முலுவின் ஆதரவாளர்கள் 200 பேருக்கு மேல் ரோஜாவின் காரை வழி மறித்து போராட்டம் செய்து உள்ளார்கள். மேலும், ரோஜாவுக்கு எதிராக கோஷமிட்டு தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள். இதனை அறிந்த போலீசார் ரோஜாவை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரோஜாவுக்கு ஒன்றியக்குழு உறுப்பினருக்கும், அம்முலுவிற்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடும் பிரச்சனையும் இருந்து உள்ளது. இது பனிப்போர் ஆகவே இவர்கள் இடையே நடந்து வந்து உள்ளது.
தற்போது அம்முலுவின் ஆதரவாளர்கள் ரோஜாவை தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரோஜாவிடம் கேட்டபோது அவர் கூறியது, இது எதிர்க் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர் என்னை தாக்க முயன்று உள்ளார்கள். எங்களுடைய கட்சிக்குள் உட்கட்சி பிரச்சினை இருப்பது போல் காட்டுவதற்காகத் தான் இந்த முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளார்கள் என்று கூறினார்.