ரோஜா படத்திற்கு வாங்கிய முதல் சம்பளம், ஒரே நேரத்தில் 4 கீ போர்டுகள். ஏ ஆரின் சில சுவாரசிய தகவல்கள்..

0
1414
- Advertisement -

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களின் பிறந்த நாள் இன்று. இது இவருக்கு 53 வது பிறந்த நாள் ஆகும். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஏ ஆர் ரகுமான் குறித்து பல சுவாரசியமான விஷயங்கள் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் ஆர்வமாக பகிர்ந்தும் வருகிறார்கள். இவரை ” இசைப்புயல், மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். ஏ.ஆர். ரகுமான் அவர்களின் உண்மையான பெயர் திலீப் குமார். இவர் தன்னுடைய 23வது வயதில் மதகுரு, காத்ரி இஸ்லாமின் வழிகாட்டுதலோடு இஸ்லாம் மதத்தை தழுவினார். இவருடைய அப்பா பெயர் ஆர்.கே.சேகர். இவர் மலையாளத்தில் 50 படங்களுக்கு மேல் இசையமைத்தவர். அதுமட்டுமில்லாமல் ஏ.ஆர். ரகுமானுக்கு சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/B69r4KLpr3f/

இவர் சிறுவயதில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான `வொன்டர் பலூன்’ என்ற நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 4 கீ போர்டுகளை வாசித்துப் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானர். உண்மையிலேயே சொல்லவேண்டுமென்றால் ஏ ஆர் ரஹ்மானுக்கு கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேண்டும் என்பது தான் சிறு வயது கனவாம். ஆனால், இவர் இசையின் மீது இருந்த ஈடுபாடு காரணமாக 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டார். பின்னர் பல இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தி வந்தார். மேலும், இவர் உதவி தொகை பெற்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் வெஸ்டர்ன் கிளாசிக்கல் மியூசிக் பட்டமும் பெற்றார். அதற்குப் பின்னர் தான் இவர் இளையராஜாவின் இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின் எம்எஸ் விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன், ரமேஷ் நாயுடு உள்ளிட்ட பல இசைக் கலைஞர்களுடன் இவர் பணியாற்றியுள்ளார்.

- Advertisement -

இவர் திரைத்துறையில் இசை அமைப்பதற்கு முன் விளம்பரப் படங்களுக்கு தான் இசையமைத்து வந்தார். மேலும், இவர் முதன் முதலாக இசை அமைத்தது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான “யோதா” என்ற திரைப்படத்துக்கு தான். ஆனால், இந்த படம் வெளியாவதற்கு முன்னர் தமிழில் ரோஜா படம் வெளியானதால் ரோஜா படமே ரகுமானின் முதல் படமாக மாறியது. இது பல பேருக்கு தெரியாத விஷயம். அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் ரோஜா படத்தின் போது 25 ஆயிரம் ரூபாய் சம்பளமும் பெற்றார். இவருடைய முதல் படத்திலேயே பாடல்கள் எல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட்டு கொடுத்தது. ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு சிந்து பைரவி ராகத்தில் உள்ள பாடல்களை தான் அதிகம் விரும்பி கேட்பார். இவர் எப்போதும் இரவு நேரங்களில் தான் இசையமைப்பார்.

“அல்லா – ரக்கா ரஹ்மான்” என்பது தான் ஏ ஆர் ரகுமான் என்ற பெயரின் விளக்கம் ஆகும். அதுமட்டும் இல்லாமல் 2013 ஆம் ஆண்டு கனடா நாட்டின் ஒன்டாரியோவில் உள்ள ஒரு தெருவுக்கு ஏ ஆர் ரகுமான் உடைய பெயர் சூட்டப்பட்டது. ரகுமான் பாடிய “ஜெய் ஹோ” என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருதை பெற்று தந்தது. ஒரே ஆண்டில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒரே ஆசிய இசை கலைஞர் ஏ.ஆர். ரகுமான் மட்டும் தான். 1992 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு மேல் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் ஏ ஆர் ரகுமான் தான் பெற்றார். உலக அளவில் ஏ ஆர் ரகுமான் பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்து வருகிறது. வருடம் வருடம் இவருடைய பாடல்கள் எல்லாம் உலகின் சிறந்த பத்து பாடல்களில் இடம் பிடித்து விடும். இவர் திரைப்படங்களுக்கு மட்டுமில்லாமல் ஏர்டெல் நிறுவனத்துக்கு இசை அமைத்து கொடுத்தார்.

-விளம்பரம்-

இது உலக அளவில் அதிக டவுன்லோட் செய்யப்பட்டு பிரபலமானது. ஏ ஆர் ரகுமான் போலவே இளம் வயதிலேயே இசை மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார் ரகுமானின் மகன். 2009 ஆம் ஆண்டு அமெரிக்க பிரதமராக இருந்த ஒபாமா அவர்கள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது இரவு உணவுக்கு முன்பாக ரகுமானின் இசை கச்சேரி வெள்ளை மாளிகையில் நடந்தது. அதோடு வெள்ளை மாளிகையில் இசை கச்சேரி நடத்திய முதல் கலைஞர் என்ற பெருமையை பெற்றவர் ஏ ஆர் ரகுமான். திரை உலகில் 27 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய இசை புலமையை காண்பித்து வருகிறார். சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் ஏ ஆர் ரகுமான் பாடிய சிங்கப் பெண்ணே பாடல் வெறித்தனமாக ரசிகர்களை தெறிக்கவிட்டு வருகிறது. இவருடைய பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டே தான் உள்ளது.

Advertisement