மாரி 2-வில் சாய் பல்லவி இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாரா..? ஷாக் ஆன ரசிகர்கள்..!

0
965
Sai-pallavi

நடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் “பிரேமம்” என்ற படத்தின் மூலம் திரை துறையில் கதாநாயகியாக அறிமுகமானவர். தற்போது தமிழ் ,தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் “தியா ” என்ற தமிழ் படத்திலும் நடித்திருந்தார். அந்த படம் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது.

sai-pallavi

தற்போது இவர் தமிழில் தனுஷ் நடித்த “மாரி ” படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி . இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய மாறிபடத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பலதரப்பட்ட கருத்துக்களை பெற்றது. இந்நிலையில் இதன் இரண்டம் பாகத்தை இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிவருகிறார்.

இந்த படத்தில் மாறி படத்தின் முதல் பாகத்தில் நடித்த ரோபோ ஷங்கர் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத் குமார், மலையாள நடிகர் டொவினோ தாமஸ் போன்றவர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி ஒரு ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

maari 2

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் காட்சி ஒன்றில் நடிகை சாய் பல்லவி ஆட்டோ ஓட்டும் காட்சி படமாக்கப்பட்டிருந்ததாம், அந்த காட்சியை பார்த்த ரசிகர்களும் அவரை பாராட்டி இருந்தாராம். ஆனால் நடிகை சாய் பல்லவி உண்மையில் “மாரி 2” படத்தில் ஆட்டோ ஓட்டுனராகத்தான் நடித்துள்ளாரா என்று படக்குழுவில் இருந்து இதுவரை எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை. மேலும், இந்த படம் இவ்வருட இறுதிக்குள் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.