தன்னை பற்றி தவறாக பேசிய பிரபல நடிகருக்கு, சாய் பல்லவி கொடுத்த பதில் !

0
1256
Actor naga shaurya

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் பிரபலம் ஆனவர். அதன்பின்னர் மலையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தற்போது சூர்யாவை வைத்து செல்வராகவன் இயக்கும் படத்திலும், தனுசின் மாரி-2 படத்திலும் நடித்து வருகிறார்.

naga shaurya

- Advertisement -

தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வெளிவந்த ‘கரு’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்த படத்தில் நடிகர் நாக சௌரியாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி.ஆனால் படப்பிடிப்பில் சாய் பல்லவி தன்னிடம் மிக கடுமையாக நடந்து கொண்டதாகவும், சின்ன சின்ன விஷயங்களில் அதிகமாக கோபப்படுவதாகவும் கூறினார் நாக சௌரியா.

இந்த சம்பவம் குறித்து தற்போது வாய் திறந்துள்ளார் சாய் பல்லவி.அவர் கூறியதாவது, நாக சௌரியா ஒரு திறமையான நடிகர். அவர் மீது எனக்கு அதிக மரியாதை உள்ளது. அவர் என்னைப்பற்றி ஏன் இப்படி கூறினார் என தெரியவில்லை. ஆனால் இனிமேல் அவர் என் மீது நல்ல எண்ணம் கொள்வார் என நம்புகிறேன், எனக் கூறினார் சாய்.

-விளம்பரம்-
Advertisement