ஏ ஆர் முருகதாஸ் மகளா இது – ஹீரோயின் ரேஞ்சுக்கு எப்படி ஆளே வளர்ந்துவிட்டார் பாருங்க.

0
1009
murugadoss
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒருவர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கி வருகிறார். இவர் முதன் முதலாக அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானர். அதனை தொடர்ந்து ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு,கத்தி,சர்கார் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

-விளம்பரம்-

எ ஆர் முருகதாஸ் ஒரு இயக்குனர் மட்டும் கிடையாது எழுத்தாளர், நடிகர் என பன்முகங்களை கொண்டவர். இவர் பல படங்களில் வசனம் எழுதி கொடுத்திருக்கிறார். தொடக்கத்தில் தன்னுடைய கல்லூரி நாட்களில் கலாசார நிகழ்வுகளில் மிமிக்ரி, ஓவியம் போன்றவற்றை ஈடுபாடு கொண்டவராக இருந்துள்ளார். தொடக்கத்தில் நகைச்சிவைகளை எழுதி அவற்றை ஆனந்த விகடனில் வெளியிட்டு வந்துள்ளார் பின்னர் கதைகளை எழுத தொடங்கிய இவர் முதலில் பி கலைமணியிடம் மீனாட்சி என்ற படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.

- Advertisement -

ரஜினி படத்தில் சறுக்கல் :

இவர் எடுத்த படங்களில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கத்தி , துப்பாக்கி, சர்க்கார் போன்ற படங்கள் தொடர்ந்து மாபெரும் வெற்றியை இவருக்கு கொடுக்கிறது .அதன் பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த தர்பார் ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி தோல்வி அடைந்தது. இதனால் இவர் அடுத்து எடுக்க இருந்த விஜய் படமும் கைவிடப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு வெளியான திரிஷா படத்தை இயக்கியிருந்தார் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் விஜய்யை வைத்து மீண்டும் தளபதி 68 படம் இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது

குடும்பம் :

இந்திலையில் கள்ளக்குறிச்சியில் பிறந்த ஏ. ஆர்.முருகதாஸ் அதே ஊரை சார்ந்த ரம்யா என்ற பெண்ணை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் இவரது மனைவி ரம்யா மிகுந்த கடவுள் பக்தி கொண்டவராம். அதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி கோவில் குளம் என்று தான் சுற்றுவார்களாம். தற்போது ஏ. ஆர். முருகதாஸிற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். பெரும்பாலும் பிரபலங்கள் சிலர் தங்களது குடும்ப நபர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து கொள்வது இல்லை. ஆனால் முருக தாஸ் சற்று வித்யாசமனவராக இருக்கிறார்.

-விளம்பரம்-

பிள்ளைகள் மீது பாசம் :

இவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாளும் பெரும்பாலும் தனது மனைவி மற்றும் தனது பிள்ளைகளுடனே தான் செல்கிறார். அவ்வளவு ஏன் தனது மகன் மற்றும் மகளை அடிக்கடி படத்தின் ஷட்டிங் ஸ்பாட்டிற்கு கூட அழைத்து செல்வாராம். விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் போது கூட அவர்கள் இருவருமே விஜயயை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து பேசியுள்ளனராம். இந்நிலையில் முருகதாஸ் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement