ரோஜா, சிம்ரன், நக்மா என்று பல்வேறு நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்தது இந்த நடிகை தான்.

0
91282
soundarya
- Advertisement -

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பல்வேறு பக்திப்படங்கள் வந்திருக்கிறது. அப்படி வந்த பெரும்பாலான படங்களில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்தது ரம்யா கிருஷ்ணன் தான். அந்த வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அம்மனாக நடித்து கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் இருந்து டப் செய்யப்பட்ட திரைப்படம் தான்.

-விளம்பரம்-
ramya krishnan

இருப்பினும் இந்த படம் தமிழிலும் மாபெரும் வெற்றியை அடைந்திருந்தது. இந்த படத்தில் தெலுங்கு நடிகை சௌந்தர்யாவிற்கு டப்பிங் கொடுத்தது வேறு யாரும் இல்லை பிரபல நடிகையான சரிதா தான். பழம் பெரும் நடிகை சரித்தா 1978 ல் தெலுங்கில் கே பாலச்சந்தர் இயக்கிய மரோ சரித்ரா என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் வெளியான தப்பு தாளங்கள், அவள் அப்படித்தான் ,வண்டி சக்கரம் போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகை என்று நிரூபித்தார்.

- Advertisement -

இதுவரை தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் 150 கும் மேற்பட்ட படங்களில் நடித்த சரிதா. இதுவரை சிறந்த நடிகை என்ற விருதினை 6 முறைக்கும் மேல் பெற்றுள்ளார். நடிப்பையும் தாண்டி நடிகை சரிதா பல்வேறு நடிகைகளுக்கு டப்பிங்கும் கொடுத்துள்ளார். அதில் குறிப்பாக சொல்ல போனால் நடிகை விஜய சாந்தி அம்மனாக நடித்த அம்மன் என்ற படத்தில் அவருக்கு டப்பிங் செய்து அந்த படத்திற்காக சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் என்ற விருதையும் பெற்றுள்ளார்.

sarita_chillum

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவர், ரோஜா, சிம்ரன், நக்மா, ராதா, தபு, மாதவி போன்ற பல முன்னனி ஹீரோய்ங்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். மேலும் 1997 ஆம் வெளியான அம்மன் என்னும் பக்திப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது.அந்த படத்தில் அம்மனாகா நடித்த விஜய சாந்திக்கு டப்பிங் கொடுத்த சரிதாவிற்கு சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்ற விருதும் வழங்கபட்டது. இதுவரை 20 படங்களுக்கு மேல் டப்பிங் கொடுத்துள்ள சரிதா அதற்காக பல விருத்தினையும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement