மகள் விளையாடும் அழகை கடைசி வரிசையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் விஐய்.

0
3023
vijay

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து தற்போது விஜய், நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் இணைய இருக்கிறார். இதை பற்றிய தகவல்கள் கடந்த சில நாட்களுக்கு முன் வைரலானது.

இளைய தளபதி விஜய் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டு காலமாக ஒரு ரொமான்டிக் ஜோடியாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இதையும் பாருங்க : ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்த #14YearsOfSivajiTheBoss – ரஜினி முதலில் சிபாரிசு செய்தது இந்த காமெடி நடிகரையும், இந்த இந்தி ஹீரோயினியையும் தான்.

- Advertisement -

விஜய்யின் மகனான சஞ்சய் மற்றும் மகளான திவ்யா ஷாஷா இருவருமே விஜய் படத்தில் நடித்திருக்கிறார்கள். இதில் தஞ்சை விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் தோன்றியிருந்தார். அதேபோல விஜய்யின் மகள் திவ்யா ஷாஷா தெறி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தோன்றி இருந்தார். மேலும், விஜய் மகள் திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார்.

Divya Saasha(Vijay Daughter) Age, Wiki, School, Date of Birth, Studies

மேலும், இவர் ஒரு பேட்மிட்டன் வீராங்கனை. இவருக்காக நடிகர் விஜய் தான் கட்டிய புதிய வீட்டில் பேட்மிட்டன் கோர்ட்டை அமைத்து இருக்கிறார். இந்த விளையாட்டில் நிறைய பரிசுகளை கூட வாங்கியிருக்கிறார்.திரையுலகில் பெரிய நட்சித்திர நடிகராக இருந்தாலும் விஜய் தனது குடும்பத்தை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார். இந்நிலையில் தளபதி விஜய் தனது மகள் திவ்யா பேட்மிட்டன் விளையாடுவதை பார்க்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement