பழம்பெரும் நடிகை சாவித்ரி மகளா இவங்க..? புகைப்படம் உள்ளே.!

0
2298
Actress savitri

பிரபல நடிகை சாவித்ரியை மக்கள் சற்று மறந்துவிட்ட நிலையில், அவரது வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்த “நடிகையர் திலகம் ” என்ற படம் அவரது நினைவுகளை மீண்டும் மலர வைத்தது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் கீர்த்தி சுரேஷிற்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

Vijaya Chamundeshwari

நடிகை சாவித்ரி, ஆந்திர மாநிலத்தில் பிறந்தாலும் இவரை தமிழ் சினிமா தான் வீட்டு பிள்ளையாகவே பார்த்தது. தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கிவந்தார் நடிகை சாவித்ரி. மேலும் தமிழில் எம்.ஜி.ஆர் , சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற பல மாபெரும் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

1952 ஆம் ஆண்டு நடிகர் ஜெமினி கணேசன் இவரை இரண்டம் மனைவியாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு சதிஷ் குமார் கணேசன் என்ற ஒரு மகனும் ஒரு விஜய சாமுண்டீஸ்வரி என்ற மகளும் பிறந்தனர்.

Vijaya-Chamundeshwari

விஜய சாமுண்டீஸ்வரி, சாவித்ரியின் மரணத்திற்கு பிறகு அவரது பெரியம்மா வீட்டில் தான் வளர்ந்தாராம். மேலும், இவருக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனராம். அதில் முத்த மகன் அபினவ் தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான “ராமானுஜம் ” என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.