என் கல்யாண விஷயம் என்ன பெர்முடா முக்கோனமா, எப்ப பாத்தாலும் ஆராய்ச்சி செஞ்சிட்டே இருக்கீங்க – கடுப்பான விஷால்.

0
1692
Vishal
- Advertisement -

நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் நடைபெற இருப்பதாக வெளியான செய்தி குறித்து நடிகர் விஷால் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல நடிகையான லட்சுமி மேனனை விஷால் திருமணம் செய்ய இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று பட்டப்பெயரை எடுத்தவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் தான் இவர். இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும் இன்னும் இவருக்கு திருமணம் ஆகாது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை கொடுத்திருக்கிறது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலருமே விஷாலுக்கு எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டே வருகிறார்கள். இது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் ஒரு சர்ச்சையாகவே இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு விஷால் அவர்கள் அணிசா என்பவரை காதலித்திருந்தார்.

- Advertisement -

பின் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை இவர்கள் திருமணம் நடைபெறவில்லை. . பின் விஷாலுக்கும் நடிகை லட்சுமிமேனன் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் வந்து இருந்தது.ஆனால், இருவருமே இதைப் பற்றி எதுவும் பேசவில்லை, பின் விஷால், வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாக கூறியிருந்தார்கள்.

ஆனால், இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். அதற்குப்பின் விஷால் குறித்து எந்த ஒரு காதல் கிசு கிசுவும் சோசியல் மீடியாவில் வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் லட்சுமி மேனன் மற்றும் விஷால் காதலுக்கு இரு வீட்டாரும்

-விளம்பரம்-

இந்த நிலையில் தனது திருமண செய்திகள் குறித்து விஷால் விளக்கம் கொடுத்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘பொதுவாக என்னைப் பற்றிய எந்த போலிச் செய்திகளுக்கோ அல்லது வதந்திகளுக்கோ நான் பதிலளிப்பதில்லை. அப்படி செய்வது பயனற்றது என்று நான் நினைக்கிறேன். ஆனால் தற்போது நடிகை லட்சுமி மேனன் உடனான எனக்கு திருமணம் என்கிற ரீதியில் வதந்தி பரவி வருவதால், நான் இதை முற்றிலுமாக மறுக்கிறேன். இந்த செய்தி முழுக்க முழுக்க ஆதாரமற்றது.

என்னுடைய இந்த விளக்கத்துக்கு காரணம், இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் ஒரு நடிகை என்பதை விட முதலில் அவர் ஒரு பெண். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து மற்றும் அவருடைய இமேஜைக் கெடுக்கிறீர்கள்.ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை ஆராய்வதற்கு அது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement