தெய்வமகள் வில்லி சுஹாசினி யாரை காதலிக்கிறார் தெரியுமா..? அவரே சொன்ன பதில்

0
1387
suhasini

தெய்வமகள்’ சீரியலில் செம்மையான வில்லியாக மிரட்டியவர், சுஹாசினி. அந்த வில்லி கதாபாத்திரமே அவருக்குத் தனியொரு பெயரைப் பெற்றுத்தந்தது. வில்லியாக நடித்திருந்தாலும் பலருக்கும் `தெய்வமகள்’ வினோவைப் பிடித்திருந்தது. அவருடைய நடிப்பில் சின்னச் சின்ன விஷயங்களில் கூட நம்மைக் கவந்தவர். `தெய்வமகள்’ முடிவடைந்துள்ள நிலையில், என்ன செய்துகொண்டிருக்கிறார்? தெரிந்துகொள்வதற்கு முன்னர், அவரைப் பற்றி ஒரு குட்டி பயோ…

subashini dheivamagal

- Advertisement -

பெயர்: சுஹாசினி
முதல் சீரியல்: கோலங்கள்
முதல் படம்: ABCD
தற்போது: நிகழ்ச்சிகளில் பாடல் பாடுகிறேன்.
குடும்பம்: அன்பான அம்மாவை அரவணைக்க நான்.
எதிர்காலத் திட்டம்: சீரியல்… சீரியல்… சீரியல்!

நான் பிறந்து, வளர்ந்தது சென்னை. பி.காம் படிச்சிருக்கேன். வீட்டுல நானும் அம்மாவும் மட்டும்தான். நான் ஆறாவது படிக்கும்போதிலிருந்து நிகழ்ச்சிகளில் பாடறேன். என் அம்மாவும் ரொம்ப அருமையா பாடுவாங்க. அவங்களால்தான் எனக்கும் இசை மேலே காதல் வந்துச்சு” என்கிற சுஹாசினியிடம் மிமிக்ரி மற்றும் நடனமும் ஒளிந்திருக்கிறது. சின்ன வயசுல இருந்தே நிறைய நிகழ்ச்சிகளில் பாடல் பாடியிருக்கேன். சீரியல், சினிமான்னு வந்ததுக்கு அப்புறம் பெரும்பாலும் பாடல் பாடுறதுல கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. பாடல்தான் என்னுடைய ஸ்ட்ரெஸ் பஸ்டர்.

-விளம்பரம்-

“ `கோலங்கள்’ மூலம் என் சீரியல் வாழ்க்கை ஆரம்பிச்சது. அதுவும் விகடன் புரொடக்‌ஷன்தான். கடைசியா நடிச்ச `தெய்வமகள்’ சீரியலும் விகடன் புரொடக்‌ஷன்தான். `கோலங்கள்’ சீரியலில் சின்னக் கதாபாத்திரமாக இருந்தாலும், நிறையப் பேருக்கு என் முகத்தை அடையாளப்படுத்திச்சு. சீரியலில் நடிச்சுட்டிருக்கும்போதே சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. முதல் படம் `ABCD’. அப்புறம், நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால், சீரியலில் நடிச்சிட்டிருந்ததால் படங்களில் தொடர முடியலை. `தெய்வமகள்’ என் கேரியருக்கு திருப்புமுனையா இருந்துச்சு. பலரும் `வினோ’னுதான் என்னைக் கூப்பிடறாங்க. ஐந்து வருஷம் அந்த சீரியலில் ஒரு குடும்பமாக எல்லோரும் பழகினோம். இப்போ எல்லோரையுமே மிஸ் பண்றேன். பிஸியாவே இருந்துட்டு கொஞ்ச நேரம் சும்மா இருந்தாலும் ஏதோ மாதிரி இருக்கு. ஷூட், டப்பிங்னு பழகிடுச்சுல அதான்” என்றவரிடம், `இப்போ என்ன செய்றீங்க?’ எனக் கேட்டால் புன்னகைக்கிறார்.

dheivamagal subashini

எனக்குப் பிடிச்ச பாடல் துறையை மறுபடியும் தேர்ந்தெடுத்திருக்கேன். நிகழ்ச்சிகளிலும் கச்சேரிகளிலும் பாட்டு பாடறேன். இசைக் குழுவில் இணைந்து பாடறது செம்ம ஃபீல். எங்க அம்மா எல்.ஆர்.ஈஸ்வரியம்மா மாதிரி பாடுவாங்க. எனக்கும் அவங்க குரலில் பாடணும்னு ஆசை. ஆனா, அவ்வளவு எளிதாகவெல்லாம் ஈஸ்வரி அம்மாவின் குரலில் பாட முடியாது. அவங்களுடைய குரல் பாடும்போது தனியா தெரியும். அந்த அளவுக்குப் பாடுவதற்கு நிறைய முயற்சிகள் மேற்கொள்ளணும். கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு இருக்கேன். பாடல் துறையிலும் என் குரலுக்கென ஒரு பெயர் வாங்கணும். `தெய்வமகள்’ சீரியலுக்கு அப்புறம், வேற சீரியல் வாய்ப்பு அமையலை. நல்ல கதாபாத்திரத்துக்காகக் காத்திருக்கேன். வாய்ப்பு கிடைச்சா மறுபடியும் சீரியலில் என்னைப் பார்க்கலாம்” என்றவரிடம், `கல்யாணம் எப்போ?’ எனக் கேட்ட நொடியில் பதில் அளிக்கிறார் சுஹாசினி…

எனக்கு நிறைய லவ் புரொபோசல் வந்திருக்கு. ஆனால், இப்போதைக்கு லவ் பண்ற ஐடியாவோ, கல்யாணம் பண்ற ஐடியாவோ இல்லீங்க. எனக்கு நிறைய சாதிக்கணும். லைஃப்ல உருப்படியா ஏதாவது செய்யணும். அப்புறம்தான் எல்லாமே!”

Advertisement