விமானத்தில் நான் பட்ட கஷ்டத்தை எந்த பெண்ணும் படக் கூடாதுன்னு என் பேக்ல எப்பயம் இத வச்சிருப்பேன் – ஷகீலாவின் தாய்மை குணம்.

0
11868
shakeela
- Advertisement -

சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார்.இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

-விளம்பரம்-

இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்தவர்.இவருடைய கவர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மயங்காதவர்கள் இருக்க மாட்டார்.இதனாலே ஷகிலா படங்களுக்கு திருவிழா போன்று கூட்டம் கூடும். சகிலா படம் ரிலீசாகும் என்றால் அங்கு சூப்பர் ஸ்டார்களின் படங்கள் கூட ஓடாது. அந்த அளவிற்கு சகிலா கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார். மேலும், இவர் மலையாளம், தெலுங்கு, இந்தி, தமிழ் என பல மொழிகளில் இவர் படங்களில் நடித்து உள்ளார்.ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஒன்று உருவாகி உள்ளது. இப்படி ஒரு நிலையில் நடிகை ஷகீலா விமானத்தில் தனக்கு நேர்ந்த கஷ்டம் ஒன்றை கூறியுள்ளார்.

- Advertisement -

பிரபல யூடுயூப் சேனல் ஒன்றில் அடிக்கடி ஒளிபரப்பாகும் ‘whats inside the bag’ என்ற ஒரு பகுதி யூடியூபில் மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் நடிகைகள் தங்கள் கைப்பையில் என்ன இருக்கிறது என்பதை காட்ட வேண்டும். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் ஷகீலா பங்குபெற்று இருந்தார். அப்போது தன்னுடைய பேகில் sanitary pads-ஐ எப்போதும் வைத்தியிருப்பேன் என்று காட்டி அதற்கான காரணத்தை சொன்னார். அதில் ‘நான் ஒரு விமானத்தில் சென்று கொண்டு இருக்கும் போது, விமானத்தின் பயம் காரணமாக எனக்கு அதிகப்படியான மாதவிடாய் ரத்தப் போக்கு ஏற்பட்டுவிட்டது.

அப்போது என் ஆடை முழுதும் ஆகிவிட்டது. பின்னர் என்ன பண்ணுவது என்று தெரியாமல் அங்கே இருந்த பணிப்பெண்களிடம் நேப்கின் கேட்டேன். ஆனால், தங்களிடம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அப்போது நான் மிகவும் அவஸ்திப்பட்டேன். அன்றிலிருந்து எந்த பெண்ணும் இப்படி அவஸ்தை பட கூடாது என்பதற்காக, நான் எப்போதும் இதை என் பேகில் வைத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement