மேடம், நீங்கள் பிராமின் தானே ? அண்ணாமலையை கேலி செய்ததால் ரசிகர் போட்ட கமன்ட் – நடிகை கொடுத்த செருப்படி பதில்.

0
2156
Sharmila
- Advertisement -

தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவனின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான சர்ச்சை வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து பாஜக மாநில பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் தெரிவித்து இருந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாஜகவில் இணைந்தார் ஊடகவியலாளர் மதன் தன்னுடைய மதன் டைரி என்ற யூடுப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மேலும், அண்ணாமலை சொன்ன பின்னர் தான் அந்த வீடியோவை வெளியிட்டதாகவும் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

அந்த வீடியோவில் பாஜகவில் உள்ள சில தலைவர்கள் பெண்களிடம் அத்து மீறி நடக்கின்றனர். பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கின்றனர். அதற்காக சில இடங்களையும் சென்னையில் வைத்துள்ளனர். 15 தலைவர்கள் இதுபோன்று செயலில் ஈடுபடும் வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் உள்ளன. பாஜக மாநில பொறுப்பில் உள்ள கே.டி. ராகவன், ஒரு பெண் நிர்வாகியிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்று  பாருங்கள் என்று கூறி சில ஷாக்கிங் ஆதாரங்களை காண்பித்துள்ளார் மதன்.

இதையும் பாருங்க : சினிமால ரீ – என்ட்ரி மாதிரி அரசியல்லையும் ரீ -என்ட்ரி கொடுப்பீர்களா ? கேள்வியால் கடுப்பான வடிவேலு.

- Advertisement -

மேலும், அண்ணாமலை சொல்லித்தான் இந்த வீடியோவை தான் வெளியிட்டதாக கூறினார், ஆனால், அண்ணாமலையே, மதனை தான் வீடியோ வெளியிட சொல்லவில்லை என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் அண்ணாமலை பேசிய ஆடியோவையும் மதன் வெளியிட்டார். இந்த ஆடியோ வெளியானதில் இருந்தே அண்ணாமலையை பலர் கேலி செய்து வருகின்றனர்.

இப்படிஒரு நிலையில் நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா, அண்ணாமலையை கேலி செய்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதிலும் தன்னுடைய ஆடியோ வெளியான பின்னர் பேசியிருந்தா அண்ணாமலை சமூக வலைத்தளங்களில் விமர்சனம் என்னும் குப்பைகளை என் மீது போடுகிறார்கள் அந்த குப்பையில் தாமரையை வளர்ப்போம் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

இதனை கேலி செய்யும் விதமாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த ஷர்மிளா குப்பைத்தொட்டியில் குப்பையை தானே கொட்டுவாங்க,நல்லா உருட்டுறீங்கப்பா என்று பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் ட்விட்டர் வாசி ஒருவர் , மேடம், நீங்கள் பிராமின் தானே ? என்று கமன்ட் செய்தார். இதற்கு பதில் அளித்த ஷர்மிளா, முதலில் நான் ஒரு மனுஷன், என்னுடைய பிறப்பை விட என்னுடைய நம்பகத்தண்மை மற்றும் குணம் ஆகிய இரண்டு வைத்து தான் என்னை தெரிய வேண்டும் என்று நினைப்பேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement