16 வயதில் நாயகியாக நடிக்க வந்து 17 வயதில் திருமணம் செய்து 18வது வயதில் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட நடிகை.

0
419
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ உச்ச நடிகைகளின் மரணங்கள் இன்று வரை மர்மமாகவே தான் இருந்து வருகிறது. அந்த தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்த இவரது மரணமும் இன்று வரை ஒரு மர்மம் தான். இவர் கேரளாவில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் லட்சுமி . இவர் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு இவர் உத்ராத ராத்திரி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தார். பின் இவர் அச்சாணி, நிழல் நிஜமாகிறது, ஒரு வீடு ஒரு உலகம் போன்ற பல படங்களின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இயக்குனர் மகேந்திரனின் முள்ளும் மலரும் படம் தான் சோபாவுக்கு திரை உலகில் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்திருந்தது. அதிலும் இவர் நடித்த அழியாத கோலங்கள், மூடுபனி உள்ளிட்ட படங்கள் எல்லாம் யாராலும் மறக்க முடியாத ஒன்று.

- Advertisement -

சோபா நடித்த படங்கள்:

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த பாடல்கள் எல்லாமே ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறது. அதிலும் சோபாவின் முக பாவனைகள் அந்தப் பாடலுக்கு கூடுதல் அழகே தரும் என்று சொல்லலாம். எரி நட்சத்திரம் என்று சோபாவை பலரும் குறிப்பிடுவார்கள். தன்னுடைய 17 வருட சினிமா வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பல சாதனைகளை சோபா செய்து இருக்கிறார். தமிழின் மிகச்சிறந்த இயக்குனரான பாலு மகேந்திரா அவர்கள் சோபாவின் ஒவ்வொரு அசைவையும், அழகான நடிப்பையும் அழகாக காண்பித்திருந்தார்.

சோபா மரணம்:

-விளம்பரம்-

இருவருடைய உறவு திருமணம் வரை நீண்டது. பின் 1980 ஆம் ஆண்டு திடீரென்று சோபா தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்போது அவருக்கு வெறும் 18 வயது தான். இவருடைய தற்கொலை தான் புரியாத புதிராகவே இருக்கிறது. இவருடைய மரணம் ரசிகர்கள் மத்தியிலும் திரை உலகின் மத்தியிலும் பேரிழப்பாக இருந்தது. இந்நிலையில் மறைந்த நடிகை சோபா குறித்து குட்டி பத்மினி பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், நடிகையின் சோபா மாதிரி ஒரு கட் அவுட் ரெடி பண்ணி அவருடைய அம்மா வீட்டில் வைத்து வழிபடுகிறார்கள். அதற்கு வைர நெக்லஸ், ஜிமிக்கி போட்டு, பூ வைத்து அலங்காரம் செய்திருந்தார்.

குட்டி பத்மினி அளித்த பேட்டி:

அதனை நேரில் சென்று பார்த்த போது சோபா அப்படியே கண்முன் நிற்பது போன்று இருந்தது. அதோடு சோபாவுக்கு பிடித்த சாப்பாடு, பழம், பாட்டு போன்றவை எல்லாம் அங்கிருந்தது. ஆனால், நடிகை சோபா இறப்பதற்கு முன்பே அவருடைய கணவர் இறந்துவிட்டார். இதனால் ஷோபா ரொம்பவே மன உளைச்சலுக்கு சென்று விட்டார். அவரை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்தார். அப்போது நான் அவரை பார்க்க சென்றபோது அவருடைய உடம்பு தூக்கிப்போட்டு ரொம்ப கவலைக்கிடமாக இருந்தது. அவருடைய சகோதரியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்தான் சோபாவை மருத்துவமனையில் அனுமதித்து எல்லாம் பார்த்து இருந்தார்.

சோபா தங்கை செய்த துரோகம்:

அப்போது நான் அவரிடம் கேட்டபோது என்னுடைய நகைகளை விற்று நான் அவரை பார்க்கிறேன் என்று சொன்னவுடன் எனக்கு சந்தோஷமாக இருந்தது. பின் நீண்ட நாட்கள் கழித்து நான் சோபாவை பார்க்க சென்றேன். அப்போது அவரிடம் நான், உங்களுடைய தங்கை உங்கள் உயிரைக் காப்பற்ற அவள் நகைகளை எல்லாம் விற்று விட்டாள். திருப்பி கொடுத்து விடுங்கள். அவளுக்கும் குழந்தை இருக்கிறது என்று சொன்னேன். இதை கேட்டு கோபப்பட்ட ஷோபா, நான் தான் கிலோ கணக்கு மேல் நகையை கொடுத்து இருக்கிறேன். என்னுடைய நிலத்தை கூட அவள் எழுதி வாங்கி விட்டாள் என்று சொன்னார். இதை கேட்டவுடன் எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. இதை குறித்து நான் பக்கத்தில் விசாரித்த போதும் சோபா சொன்னது போல் தான் நடந்திருக்கிறது. உடன் பிறந்த சகோதரியே இப்படி நடந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது. யாருக்கும் இப்படி ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

Advertisement