40% யாருக்கு? அறிவித்த பட்டம்மா, குணசேகருக்கு குறி வைத்த கௌதம், அதிர்ந்த குடுமபத்தினர், இறந்தது யார்?

0
370
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பேமஸ். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். ஜனனி அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இன்னொரு பக்கம், வீட்டு பெண்கள் எல்லோரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்கள். பின் இதை குணசேகரன் கண்டுபிடித்து பிரச்சனை செய்து விடுகிறார்.

சீரியலின் கதை:

மேலும், மாரிமுத்து மறைவுக்கு பிறகு ஆதி குணசேகரனாக வேலராமமூர்த்தி என்ட்ரி ஆகியிருந்தார். முதல் நாளே இவர் போலீசாரை எட்டி உதைத்தது அதிரடியாக இருந்தது. பின் இவர் வீட்டிற்கு வந்து வழக்கம் போல் பெண்களிடம் கடுமையாக பேசி ஈஸ்வரியை வெளுத்து வாங்கி இருக்கிறார். இதனால் அனைவருமே என்ன செய்வதென்று புரியாமல் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். பின் சீரியலை விறுவிறுப்பாக கொண்டு செல்ல இயக்குனர் கிருஷ்ணா மெய்யப்பன் என்ற புது வில்லனை அறிமுகம் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

திருவிழா எபிசோட்:

இவர் ஜனனி- சக்தி சேர்ந்து வாங்க நினைக்கும் கம்பெனியை வாங்க இருக்கிறார். அனைவரும் எதிர்பார்த்த திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. திருவிழாவிற்கு குணசேகரனின் மொத்த குடும்பமும் வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஜீவானந்தம் வருகிறார். ஜீவானந்தன் மனைவியை போன்ற கதிரையும் குணசேகரனையும் பழிவாங்க கௌதம் நினைக்கிறார். இதனை அடுத்து நேற்றைய எபிசோடில் அப்பத்தா விழாவை ஏற்பாடு செய்து தான் ஆரம்பிக்கும் புதிய டிரஸ்ட் குறித்து பேசுகிறார். அதற்கு பொறுப்பாளராக ஜீவானந்தத்தை நியமிக்கிறார்.

இன்றைய ப்ரோமோ:

இதையெல்லாம் பார்த்து குணசேகரனும், கதிரும் கடுப்பில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கௌதம், கதிர்- குணசேகரனை கொல்ல துப்பாக்கியில் குறி வைத்து இருக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில், அப்பத்தா, ஜீவானந்ததிற்கு பரிசு கொடுக்க குணசேகரனை மேடைக்கு அழைக்கிறார். குணசேகரன்- ஜீவானந்தமும் மேடையில் நின்று கொண்டிருக்கும் போது கௌதம் குணசேகரன் மீது குறி வைக்கிறார். துப்பாக்கி சூடும் சத்தமும் கேட்கிறது. எல்லோரும் பயத்தில் கத்துகிறார்கள். ஆனால், துப்பாக்கி குண்டு யார் மீது தொலைத்தது தான் தெரியவில்லை? குணசேகரன் இறந்தாரா? ஜீவானந்தத்தின் உயிருக்கு ஏதாவது ஆபத்தா? யாரை தான் கௌதம் சுட்டார்? என்ற பல அதிரடித்திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement