21 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தே காணாமல் போன நடிகை சிவரஞ்சனி. அவரது தற்போதைய நிலை.

0
123612
sivaranjini
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் 90 கால கட்டங்களில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிவரஞ்சனி. இவருடைய பூர்வீகம் சென்னை மயிலாப்பூர். மேலும்,நடிகை சிவரஞ்சனி மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடனத்தில் அதிக ஆர்வமும், திறமையும் கொண்டவர். மேலும், தனது கல்லூரி படிப்பு படிக்கும் காலத்திலே பல நாடகங்களில் நடித்தும், பல மேடைகளில் நடந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல பாராட்டுகளை வாங்கிக் குவித்தவர். மேலும், இவர் 1991 ஆம் ஆண்டு “மிஸ்டர் கார்த்திக்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும்,90 கால கட்டங்களில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். அதுமட்டும் இல்லாமல் இவருடைய வசீகரமான கண்ணுக்கு பல பேர் அடிமை என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

இவர் தமிழ் சினிமாவில் சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து உள்ளார். இவருடைய நடிப்பு திறனை பார்த்து பாராட்டாதவர்கள் இருக்க மாட்டார்கள். அவருடைய அழகும், நடிப்புத் திறனுக்கு சினிமா துறையில் அடுத்து அடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. 1999 ஆம் ஆண்டு தமிழில் கிட்டத் தட்ட பிரபலமான முன்னணி நடிகையாகவும் ஆகி விட்டார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களிலும் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து 1999 ஆம் ஆண்டுக்கு பிறகு தெலுங்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நடிகை சிவரஞ்சனி ஆந்திராவிலேயே செட்டில் ஆகி விட்டார்.

- Advertisement -

இவர்களுக்கு தற்போது மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். மேலும், இவர்களின் மூத்த மகன் ரோஷன். தற்போது “நிர்மலா கான்வெண்ட்” என்ற தெலுங்கு படத்தில் நடித்து உள்ளார். ஆனால், இவர் இன்னும் படிப்பைக் கூட முழுவதுமாக முடிக்கவில்லை. மேலும், இந்த படத்தை தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா அவர்கள் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் ரோஷனுக்கு ஜோடியாக ஜில்லுனு ஒரு காதல் படத்தில் ஜோதிகா– சூர்யா அவர்களுக்கு மகளாக நடித்த ஸ்ரீயா ஷர்மா ஹீரோயினாக நடித்து இருக்கிறார். இவர்களுடைய இரண்டாவது மகள் மேத்தா. இவருக்கு ஸ்போர்ட்ஸில் அதிக ஆர்வம் உடையவர். மேலும், இளைய மகன் ரோகன். இவருக்கும் சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் தகவல் வந்து உள்ளது.

அதோடு கூடிய விரைவில் இவர் சினிமாவில் நடிக்கப் போகிறாராம். திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தைகள் என நடிகை சிவரஞ்சனி பிஸியாக உள்ளார். மேலும், திருமணத்திற்கு இவருக்கு சினிமா, சின்னத்திரையில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தது. ஆனால், அதையெல்லாம் இவர் மறுத்து விட்டார். 21 ஆண்டுகளாக சினிமா பக்கமே வராமல் உள்ளார் நடிகை சிவரஞ்சனி. நீண்ட நாட்கள் சிவரஞ்சனி பற்றிய எந்த தகவலுமே தெரியாமல் இருந்தது. பின்னர் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement